Newstm திரை விமர்சனம் - எச்சரிக்கை

  shriram   | Last Modified : 24 Aug, 2018 06:50 pm
echcharikkai-movie-review

லட்சுமி, மா உள்ளிட்ட குறும் படங்களின் மூலம் சமூக வலைத்தளங்களை தெறிக்க விட்ட இயக்குநர் சர்ஜுன், வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்திருக்கும் முதல் படம் தான் இந்த எச்சரிக்கை. சத்யராஜ், கிஷோர், வரலக்ஷ்மி, விவேக் ராஜகோபால், யோகி பாபு ஆகியோர் நடித்திருக்கின்றனர். 

ஒரு பெண்ணை கடத்தி அவளின் பெற்றோர்களிடம் பணம் பிடிக்கத் துடிக்கும் இரண்டு பேர். அவர்களை துரத்தும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி. இவர்களில் யார் வென்றார்கள் என்பதை பல ட்விஸ்ட்களோடு ஸ்வாரஸ்யமாக படமாக்கியுள்ளார் இயக்குநர் சர்ஜுன். வழக்கமான கடத்தல் கதையாக துவங்கினாலும், த்ரில்லாகவும் விறுவிறுப்பாகவும் பயணிக்கிறது. கடத்தல்காரனாக வரும் கிஷோரும், போலீசாக வரும் சத்யராஜும் படத்திற்கு பலம். புதுமுகம் விவேக் ராஜகோபால் மற்றும் நடிகை வரலக்ஷ்மியின் ஆக்டிங்கும் சிறப்பு. 

'அப்டக்ஷன் ஆஃப் ஆலிஸ் கிரீட்' என்ற ஹாலிவுட் படத்தின் மையக் கதையை கொண்டே இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. வேறு சில படங்களில் இருந்தும் கதையை தழுவியுள்ளதாக இயக்குநர் எண்ட் கார்டில் புத்திசாலித்தனமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

படத்தின் மைனஸ் பாயிண்ட்ஸ்:

வேகமாக செல்லும் படம் ஆங்காங்கே தொய்வடைகிறது.

கடத்தலுக்கு நடுவில் சம்பந்தமே இல்லாத ரொமான்டிக் சாங் நமக்கு எரிச்சல் மூட்டுகிறது.

படத்தின் க்ளைமேக்ஸ் மிகப்பெரிய வீக் பாயிண்ட்.

எல்லா கதைகளையும் ரொம்பவே சிறப்பாக முடிக்க முயற்சி செய்து லாஜிக்கை மிஸ் செய்த பீலிங்.

வசனங்களிலும் க்ளைமேக்சிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படம் சூப்பர் என்றே சொல்லியிருக்கலாம்.

மற்றபடி, குறைந்த பட்ஜெட்டில் ஒரு தரமான படம் கொடுத்த பீலிங் நமக்கு கிடைக்கிறது. 

நம்ம ரேட்டிங்: 3/5

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close