யு டர்ன் - திரை விமர்சனம்

  shriram   | Last Modified : 14 Sep, 2018 07:08 pm

u-turn-movie-review

சமந்தா, ஆதி, ராகுல் ரவீந்திரன், நரேன், பூமிகா ஆகியோர் நடித்துள்ள படம் தான் யு டர்ன். கன்னடத்தில் சிறிய பட்ஜெட்டில் 'லூசியா' எடுத்து நாடு முழுவதும் பேசப்பட்ட இயக்குனர் பவன் குமாரின் அடுத்த கன்னட படைப்பான 'யு டர்ன்' படத்தின் தமிழ் ரிமேக். தமிழ் மற்றும் தெலுங்கில், பவன் குமாரே இதை இயக்கியுள்ளார்.

படத்தை பிஆர்8 கிரியேஷன்ஸ் மற்றும் வி.ஒய் கம்பைன்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. பூர்ண சந்திர தேஜஸ்வி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார், நிகெத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 த்ரில்லர் - ஹாரர் ரகத்தை சேர்ந்தவாறு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பத்திரிகை நிருபராக வரும் சமந்தா, சென்னை  வேளச்சேரியில் உள்ள ஒரு மேம்பலத்தில் நடைபெறும் விபத்துகள் குறித்து செய்தி எழுதி வருகிறார். அந்த மேம்பாலத்தில் நடைபெறும் விபத்துக்குகளுக்கும், அது சம்பந்தமாக நடைபெறும் மரணங்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இதை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக ஆதி, சமந்தாவின் நண்பராக ராகுல் ரவீந்திரன். படத்தில் ஒரு காதல் எலமென்ட் இருந்தாலும், அதில் அதிக கவனம் செலுத்தாமல், பிரதான கதையை திகிலுடன் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர். பாடல்கள், ரொமான்ஸ் போன்ற விவகாரங்கள் இல்லாதது படத்திற்கு கூடுதல் பலம். 

துவக்கம் முதல் கதை மீதுள்ள மர்மம் அதிகரித்து கொண்டே செல்கிறது. முதல் பாதியை சூப்பர் திருப்பதுடன் முடித்திருக்கிறார்கள். அதன் பின் கதை மேலும் சூடு பிடிக்கிறது. இரண்டாவது பாதியும், அதே வேகத்துடனும், மர்மத்துடனும் செல்கிறது. பல திருப்பங்களுடன் ஒரு நிறைவான க்ளைமேக்ஸையும் கொடுத்து கலக்கி இருக்கிறார் இயக்குனர் பவன் குமார். 

படத்தில் சமந்தாவின் நடிப்பு சூப்பர். இதுவரை அவருக்கு கிடைத்த ரோல்களிலேயே மிகவும் மாறுபட்ட ரோல் என்பதாலும் அவரை மையப்படுத்திய கதை என்பதாலும் இதில் அவரது பெர்பார்மன்ஸுக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. அதை கச்சிதமாக பயன்படுத்தியுள்ளார். ஆதி, ராகுல் ரவீந்திரன் இருவரும் தங்களுக்கு கொடுத்த ரோலுக்கு ஆவன செய்துள்ளார்கள். பூர்ண சந்திர தேஜஸ்வியின் இசை படத்திற்கு கூடுதல் பலம். நிகெத் பொம்மிரெட்டியின் கேமராவுக்கு ஸ்பெஷல் மென்ஷன். இருவரும் நிறைவான த்ரில்லர் அனுபவத்தை கொடுக்க உதவியிருக்கிறார்கள்.

படத்தில் மைனஸ் பாயிண்ட் இல்லாமல் போகவில்லை. சமந்தாவின் கேரக்டர் டெவலப்மென்ட் மிஸ்ஸிங். மேலும், க்ளைமேக்சில் படம் கொஞ்சம் தொய்வடைகிறது. இறுதி காட்சிகளில் படத்தின் ட்விஸ்ட்களும், முடிச்சுகள் அவிழ்வதும் பொருத்தமாக இருந்தாலும், அதை மேலும் மெருகேற்றியிருக்கலாம் என தோன்றுகிறது. கொஞ்சம் பெட்டரான க்ளைமேக்ஸ் இருந்திருந்தால் படம் வேற லெவல்!

இந்த படத்திற்கு நம்ம ரேட்டிங்: 3.5/5

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.