சாமி 2 - திரை விமர்சனம்

  shriram   | Last Modified : 21 Sep, 2018 07:08 pm

saamy-2-movie-review

விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, பிரபு ஆகியோர் நடித்து வெளியாகியுள்ளது சாமி 2. 2003ம் ஆண்டு ரிலீசாகி இயக்குநர் ஹரிக்கு அடையாளம் கொடுத்த மெகா ஹிட் திரைப்படமான சாமியின் இரண்டாம் பாகம். த்ரிஷாவுக்கு பதில், ஐஸ்வர்யா ராஜேஷ், மொளகாப்பொடி (அ) மாமியாக நடித்துள்ளார். ஹரி இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பிரியன் மற்றும் ஏ.வெங்கடேஷ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார்.

சாமி முதல் பாகத்தில், கின் மேக்கர் பெருமாள் பிச்சையை, சாமி வதம் செய்து, செங்கல் சூளையில் எரித்துவிட்டு செல்லும் காட்சியுடன் படம் துவங்குகிறது. பெருமாள் பிச்சையின் சாவுக்கு பழிவாங்குவதராக வருகிறார் பாபி சிம்ஹா. காக்க காக்க படத்தில் பார்த்த 'பாண்டியா' கேரக்டரின் கெத்தை காட்ட முயற்சித்துள்ளனர். பாபி சிம்ஹாவும் இந்த ரோலில் செமயாக மிரட்டியிருக்கிறார். அவரை சாமி எப்படி சமாளிக்கிறார் என்பது தான் கதை.

சாமிக்கு இணையான வில்லனை பாபி மூலம் காட்ட முயற்சித்துள்ளார்கள். ஆனால், அது ஒரு சில இடங்களில் மட்டுமே வேலை செய்கிறது. சாமி முதல் பாகத்தில், வழக்கமான போலீசாக இல்லாமல், அரிவாள் எடுப்பது, பொறுக்கிகளிடம் பொறுக்கியாகவே மோதுவது, லஞ்சம் வாங்கிக்கொண்டே நேர்மையாக நடப்பது போல இருந்த பல வித்தியாசமான விஷயங்கள் இதில் மிஸ்ஸிங். கொஞ்சம் சவுண்டு எஃக்பேட்ஸ் எறியுள்ளது.  மற்றபடி சிங்கம் 4ம் பாகம் பார்த்தது போல தான் இருந்தது. 

படத்தில் விக்ரம் நடிப்பு கிளாஸ். சாமியின் கம்பீரத்தை மீண்டும் நம் கண் முன் நிறுத்தியுள்ளார். இத்தனை வயதிலும் கட்டுமஸ்தான உடலை மெயின்டெயின் பண்ணுவதில் சீயானுக்கு இணை வேறு யாருமில்லை. த்ரிஷாவின் ரோலில் ஐஸ்வர்யா ராஜேஷ். படத்தில் சின்ன ரோல் தான். அதில் அவரின் நடிப்பு திறனுக்கான ஸ்கோப் கம்மி. ஸோ, நோ கமெண்ட்ஸ். கீர்த்தி சுரேஷின் நடிப்பும் சிறப்பு. படத்தில் முக்கியமாக பேசப்பட வேண்டியது பாபி சிம்ஹா. கொடூரமான வில்லனை கண் முன் நிறுத்தியிருக்கிறார். ஒரு சில இடங்களை தவிர பாபியின் நடிப்பு ஃபர்ஸ்ட் கிளாஸ். கொஞ்ச நாளாக காணாமல் போன அவர் மீண்டு வர இந்த படம் நிச்சயம் உதவும். 

படத்தின் மைனஸ் பாயிண்ட்ஸ். இது சாமியின் அடுத்த பாகம் என்பதை விட, சிங்கத்தின் அடுத்த பாகம் என சொல்லாம். ரவுடிகள் பறப்பது, கார்கள் பறப்பது, காது கிழியும் டயலாக், ஓங்கி ஓங்கி அடிப்பது, என செல்வதால், சாமியின் எஃக்பேட் இதில் இல்லை. வில்லனின் விஸ்வரூபம் அவ்வப்போது மட்டுமே தெரிவது, படத்திற்கு கொஞ்சம் டல்லடிக்கிறது. மற்றப்படி, காக்கி சட்டை, போலீஸ் செண்டிமெண்ட் என வழக்கமான மசாலாக்களை கொஞ்சம் தூக்கலாக தூவியுள்ளார் ஹரி.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை ஓகே ரகம். மொளகாப்பொடியை தவிர வேறு எந்த பாடல்களும் மனதில் நிற்கவில்லை. பின்னை இசையும், தசாவதாரம் படத்தில் கேட்டது போலவே உள்ளது. 

முதல் பாதியை விட இரண்டாவது பாதி கொஞ்சம் வேகமாக சென்றாலும், எதிர்பார்ப்பது போலவே காட்சிக்காக நகர்வதால், ஈர்ப்பு இல்லை. போலீசுக்கென தான் வைர்த்திருக்கும் பார்முலாவை மீண்டும் இதில் புகுத்தியிருக்கிறார் ஹரி. புதிதாக ஒன்றும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 3 சிங்கம் படங்களும் பிடித்திருந்தால் சாமி 2 உங்களுக்கு ஒன் டைம் வாட்ச்.  

நம்ம வெர்டிக்ட் - 2/5

newstm.in

இதைப் படிச்சீங்களா?

டி-சர்ட்டில் இப்படியா எழுதுவது?- தினேஷ் கார்த்திக்கிற்கு கவஸ்கரின் அட்வைஸ்

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.