Newstm திரை விமர்சனம் - செக்கச் சிவந்த வானம்

  shriram   | Last Modified : 27 Sep, 2018 04:33 pm
newstm-movie-review-chekka-chivantha-vaanam

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா உள்ளிட்ட பல கோலிவுட் நட்சத்திரங்கள் ஒன்று சேர, மாபெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகியுள்ளது செக்கச் சிவந்த வானம்.

இவ்வளவு பெரிய ஸ்டார்கேஸ்ட்டை வைத்து படம் இயக்கும் தைரியமும், அனுபவமும் உள்ளவர் மணிரத்னம் மட்டுமே. ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை, சந்தோஷ் சிவன் கேமரா, என தொழில்நுட்ப பிரிவிலும் நட்சத்திரங்கள் பட்டியல் நீளுகிறது. லைகா ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். 

தமிழ் சினிமாவுக்கு நன்கு பரிட்சயமான கேங்ஸ்டர் கதைக்களம். காட்பாதர் பாணியில் உள்ள மாபெரும் டான் பிரகாஷ்ராஜ். அவரிடம் இருந்து, அரியாசனத்தை யார் பெறுவது, என அண்ணன் தம்பிகளான அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு ஆகியோருக்கு இடையே நடக்கும் மோதல் தான் படத்தின் கதை. இதில் பல ஸ்வாரஸ்யமான விஷயங்கள், ட்விஸ்ட்களை கொண்டு மிக சிறப்பாக திரைக்கதை அமைத்துள்ளார் மணிரத்னம். 

படத்தின் மிகப்பெரிய பலம், நட்சத்திரங்கள். விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, ஜோதிகா என எல்லோரின் நடிப்பும் டாப் கிளாஸ். காட்சிக்கு தேவையான எமோஷன்களை கொண்டு வந்து தங்கள் முத்திரையை பதித்துள்ளனர். அதில் தனித்து நிற்பது விஜய் சேதுபதி. எல்லோரும் மணிரத்னம் படத்தில் நடித்துள்ளனர். ஆனால், விஜய் சேதுபதி மட்டும், தன் சொந்த படத்தில் நடித்துள்ளார். மற்ற படங்களில் பார்த்த அதே குறும்போடு இதிலும் வந்து அவர் கலக்கியிருப்பது, இயக்குநருக்கு அவர் மீதுள்ள நம்பிக்கையை காட்டுகிறது. 

படத்தின் முதல் பாதி செம விறுவிறுப்பாக செல்கிறது. ஒவ்வொரு ஹீரோக்களின் இன்ட்ரோ காட்சிகள் துவங்கி, இடைவேளை வரை, படம் நம்மை முழுக்க முழுக்க ஈர்க்கிறது. துபாய், செர்பியா, சென்னை என படம் நகரும் இடமெல்லாம் கேமராவும் ஜொலிக்கிறது. ஃபேவரைட் நட்சத்திரங்கள் ஒவ்வொரு முறை திரையில் தோன்றும் போதும், ரசிகர்கள் விசில் மழையில் தியேட்டர் மூழ்குகிறது. வழக்கமான மணிரத்னம் பாணியில் வசனங்கள், சூப்பரான சேஸ் காட்சிகள், அதிரடி ஸ்டன்ட், துப்பாக்கி சண்டை என எல்லா பாக்ஸ்களையும் படம் அமோகமாக டிக் செய்கிறது. 

இரண்டாவது பாதி, டாப் கியரிலேயே துவங்குகிறது. அடுத்தடுத்த காட்சிகளில் ட்விஸ்ட்களை இயக்குநர் அவிழ்க்கிறார். ஆனால்,படத்தின் விறுவிறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது. சில முக்கியமான சென்டிமென்ட் காட்சிகள் டல்லடிக்கின்றன. ரசிகர்கள் மீது போதுமான தாக்கம் இல்லை. சேசிங், சேசிங் என கொஞ்சம் ஓவராக சென்று இயக்குநர் நம் பொறுமையை சோதிக்கிறார். இரண்டாவது பாதியில் ஒரு 30 நிமிடங்கள், டல்லாகவே செல்கிறது. அந்த பகுதியில் வசனங்களும் படத்தை காப்பாற்றவில்லை. சரி, நன்றாக துவங்கிய படம் இப்படி தான் முடியப்போகிறது என நினைக்கும் போது, மொத்த கதையும் ஒன்று கூடும் விதமாக டக்கரான ஒரு க்ளைமேக்ஸை கொடுத்து படத்தை முடித்துள்ளனர்.

சில காட்சிகளில் வசனங்கள் தனித்து நின்றாலும், பல இடங்களில் தொய்வடைகின்றன. கெத்து டயலாக் என ஹீரோக்கள் பேசும் சில வசனங்கள் நமக்கு ஒன்றும் இல்லாதது போல தெரிகிறது. சில இடங்களில் சிரிப்பு தான் வருகிறது.

இரண்டாவது பாதியில் உள்ள சில தொய்வான காட்சிகள் தவிர படம் நல்ல என்டர்டெயின்மென்ட்.

படத்திற்கு நம்ம ரேட்டிங் - 3/5

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close