'மெட்ராஸ்' ஜானியைப் பாராட்டிய பா.ரஞ்சித்!

  திஷா   | Last Modified : 22 Oct, 2018 04:10 pm
pa-ranjith-s-tweet-on-madras-jhony

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய 'மெட்ராஸ்' திரைப்படத்தில் ஜானியாக நடித்து, கவனம் ஈர்த்தவர் நடிகர் ஹரி கிருஷ்ணன். பிறகு ரஞ்சித்தின் கபாலி திரைப்படத்தில் நடித்திருந்தார். படத்தின் கிளைமேக்ஸில், ஹரி கிருஷ்ணன், ரஜினியை சுடுவது போல நம்மை உணரச் செய்யும் படி காட்சியமைக்கப்பட்டிருக்கும். 

இவர் கடந்த வாரம் வெளியாகியிருக்கும், வெற்றிமாறனின் 'வட சென்னை' மற்றும் லிங்குசாமியின் 'சண்டக்கோழி 2' ஆகிய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். 

இரண்டு இயக்குநர்களுடனும் ஹரி எடுத்துக் கொண்ட படங்களைப் பகிர்ந்த ரஞ்சித், "உன் திறமைக்கு சீக்கிரமே திரைத்துறையில் தவிர்க்க முடியாத தடம் உருவாக்குவாய்!!! வாழ்த்துகள் டா ஹரி! பெரும் மகிழ்ச்சி" என அவரது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close