மாரி 2 - திரை விமர்சனம்

  Newstm Desk   | Last Modified : 21 Dec, 2018 08:43 pm
maari-2-movie-review

தனுஷ், சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாரி 2. முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

முதல் பாகத்தை போலவே, ஒரு ஜாலியான, கலாயான டானை இந்த படத்திலும் திருப்பி கொண்டுவர முயற்சித்திருக்கிறார்கள். சனிக்கிழமை மற்றும் அடிதாங்கியோட சேர்ந்து மாரி படத்துல தனுஷ் செஞ்ச பல கூத்துகள், இந்த படத்திலும் தொடர்கிறது. அதனால் படம் ரொம்பவே ஒரு ஜாலியான, அதிரடியான படமா வந்திருக்கிறது.

படத்தோட கதை என்னன்னா, டான் மாரியை கொலை செய்ய வேண்டும் என்ற வெறியோடு ஒரு புதிய வில்லன் வருகிறார். ஜெயிலில் இருந்து தப்பித்து மாரிய கொலை செய்ய 'காட் ஆப் டெத்' என தன்னை அழைத்துக் கொள்கிறார் டொவினோ தாமஸ். மாரியின் நெருங்கிய நண்பராக கிருஷ்ணா; மாரியை துரத்தி துரத்தி காதலிக்கும் பெண்ணாக சாய் பல்லவி. இவங்களுக்கு நடுவுல ரவுடி பேபியோ சுத்திட்டு வர்ற மாரி, எப்படி லவ், வில்லன், நண்பன், துரோகம்னு எல்லாத்தையும் சமாளிக்குறாருங்கிறதை ரொம்பவே சூப்பரா எடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி. 

முதல் பாதி முழுவதும் ஜாலியாக ஒரு ஆக்ஷன் எண்டெர்டெயினராக செல்கிறது படம். ஆனால், இரண்டாவது பாதியில் எதிர்பாராதவிதமாக வேறு டிராக்கில் பயணிக்கிறது. ஆனால், அதிலும் தொய்வு ஏற்படாதவாறு சுவாரஸ்யமாக கொண்டு சென்றுள்ளது இயக்குனரின் சிறப்பு. 

தனுஷ் ரொம்பவே நல்லா நடித்திருக்கிறார். வெறும் ஆக்ஷன் மற்றும் டான்ஸ் மட்டுமல்லாமல், ஒரு சில எமோஷனல் காட்சிகளில், பின்னி பெடலெடுத்திருக்கிறார் நம்ம தனுஷ். சாய்பல்லவி, ரவுடி ஹீரோ பின்னாடி சுற்றும் வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயின் கேரக்டரை கொஞ்சம் கலர்புல்லாக செய்து முடித்துள்ளார். ரெண்டு பேரின் ரொமான்ஸும் ரொம்ப யதார்த்தமாக அமைந்துள்ளது. 

மாரி 2 படத்தில் பெரிய அளவு நெகட்டிவ் விஷயங்கள் கிடையாது. ஜாலியான மசாலா படம் என்பதால், பெரிய அளவில் லாஜிக்கையோ கதையையோ எதிர்பார்க்க வேண்டாம். க்ளைமேக்ஸ் காட்சிகள் மட்டும் கொஞ்சம் நீண்டு கொண்டே போவதாக தோன்றுகிறது. மற்றபடி, படம் தனுஷ் ரசிகர்களுக்கும், கமர்ஷியல் மசாலா பட ரசிகர்களுக்கும் பெரிய கொண்டாட்டமாக இருக்கும். மற்ற அனைவருக்கும் மாரி-2 ஒரு ஜாலியான டைம்பாஸ் திரைப்படம் ரகம்..

நம்ம ரேட்டிங்: 3/5

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close