கனா - திரைவிமர்சனம்

  Newstm Desk   | Last Modified : 22 Dec, 2018 05:17 am
kanaa-movie-review

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடித்து வெளியாகியுள்ள படம் கனா. சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளளார். இது ஒரு வழக்கமான ஸ்போர்ட்ஸ் படம் என நினைத்து தியேட்டரில் உட்கார்ந்தோம். ஆனால், ஒருபக்கம் ஸ்போர்ட்ஸ், இன்னொரு பக்கம் விவசாயம்ன்னு ரொம்ப அழகான படமாக அமைந்துள்ளது கனா. ட்ரெய்லர் ரிலீஸ் ஆன போது, ஒரு சின்ன பொண்ணு, "இந்தியா தோத்துருச்சுன்னு அப்பா அழுதாறு. அவருக்காக நான் வேர்ல்ட் கப் ஜெயிக்கணும்" என ஆசைப்படும் காட்சி இருந்தது. அது தான் படத்தின் ஒன் லைன்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு அழகான சின்ன கிராமத்தில், ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த இளம்பெண்ணுக்கும், அவரது அப்பாவுக்கும் இடையே இருக்கும் உறவில் துவங்குகிறது. அவர்களின் கிரிக்கெட் கனவுக்கு எதிராக வரும் சவால்கள், சமூக தடைகள், பிரச்னைகள் இவற்றை வைத்து மிகவும் யதார்த்தமான, பவர்புல்லான ஒரு கதைக்களத்தை உருவாக்கியுள்ளனர்.

படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் லீட் ரோல் என நினைத்தால், தந்தை கேரக்டரில் சத்யராஜ் பெரும் தூணாக நிற்கிறார். அட்டகாசமான பெர்பார்மன்ஸ் கொடுத்திருக்கிறார் சத்யராஜ். கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷின் போராட்டமும், விவசாயத்துக்காக சத்யராஜின் போராட்டத்தையும் கொண்டு சிறப்பான திரைக்கதை அமைந்துள்ளது.

கிரிக்கெட் உலகக் கோப்பை க்ளைமேக்ஸை நோக்கி தான் படம் செல்கிறது என நமக்கு தெரிந்தாலும், சுவாரஸ்யமான காட்சிகள், பவர்புல்லான வசனங்களுடன் படத்தை ரொம்ப விறுவிறுப்பாக எடுத்து சென்றிருக்கிறார் இயக்குனர் காமராஜ். இந்த படத்தோட எடிட்டர் ரூபன், ரொம்பவே சவாலான ஒரு காரியத்தை அற்புதமாக செய்திருக்கிறார். விளையாட்டை மையமாக கொண்ட படங்களில் எடிட்டிங் சுமாராக தான் இருக்கும். ஆனால், இந்த படத்தில் ஒரு நிஜமான மேட்ச் பார்க்கும் அனுபவத்தை நமக்கு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.

நிச்சயமாக, இந்த மாதிரியான படங்கள் நகரத்தில் மட்டுமல்லாமல் கிராமங்களில் இருக்கிற கடைக்கோடி பகுதிகளுக்கும் போய் சேர வேண்டும். சிறு கிராமங்களில் இருக்கும் திறமைசாலிகள் இதுபோன்ற படங்களை பார்த்தால், விளையாட்டிலும் சாதிக்க முடியும் என்ற உத்வேகம் ஏற்படும். மொத்தத்தில், இயக்குனர் அருண்ராஜா மூலமாக சிவகார்த்திகேயன், ஒரு நல்ல படத்தை தமிழ் சினிமாவுக்கு கொடுத்திருக்கிறார் என தைரியமாக சொல்லலாம். எல்லோரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு திரைப்படம் 'கனா'.

நம்ம ரேட்டிங்: 3.5/5

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close