தேவ் - திரைவிமர்சனம் | கார்த்தி, ரகுல் ப்ரீத் |

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 07:14 pm
dev-movie-review-karthi-rakul-preet-rj-vignesh

கார்த்திக், ரகுல் பிரீத், ஆர்.ஜே விக்னேஷ், பிரகாஷ்ராஜ், அம்ருதா ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் தான் தேவ். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கியுள்ளார்; ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இந்த காலத்துக்கான ஒரு லவ் ஸ்டோரி என்ற அடையாளத்துடன் உருவாக்கப்பட்ட இந்த படம், காதலர் தினத்தன்று வெளியாகியுள்ளது. காதலை அடிப்படையாக கொண்ட, திரைக்கதை என்றாலும், நட்பு, அட்வென்ச்சர், காமெடி என படம் முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன.

நம்ம ஹீரோ கார்த்தி, எல்லாவற்றையும் வித்தியாசமாக பார்க்கும் ஒரு கேரக்டர். மற்றவர்கள் போல 8 மணி நேரம் வேலை, வீடு, குடும்பம் என்றில்லாமல் இயற்கையை ரசிக்க வேண்டும், உலகை சுற்றி பார்க்க வேண்டும்; இமய மலையின் மீது நிற்க வேண்டும், என பல்வேறு ஆசைகளுடன் சுற்றித் திரிகிறார். கோடீஸ்வர வீட்டில் பிறந்தது ஒரு ப்ளஸ் பாயிண்ட்.

பணக்கார வாரிசான கார்த்திக்கு, இரண்டு பணக்கார நண்பர்கள். அவர்களின் வற்புறுத்தலால் மற்றொரு கோடீஸ்வர பெண்ணான தொழிலதிபர் ரகுலை காதலிக்கிறார். இதனாலேயே படம் முழுவதும் ஒரு Elite லவ் ஸ்டோரி என்ற பீலிங் வருகிறது.

வீட்டில் உள்ள 25 சூப்பர் பைக்குகளை விட்டுவிட்டு, ஆடி காரில் சுற்றும் பணக்கார பையன் கார்த்தி, எந்த பெண் பின்னாடியும் சென்றதில்லை என்றெல்லாம் சொல்வது கொஞ்சம் ஓவராகவே தெரிகிறது. பிழைகள் இல்லாத ஆண், என காட்ட முயற்சித்திருக்கிறார்கள். அப்படி இல்லாமல் இருந்தால், இன்னும் எதார்த்தமாக இருந்திருக்கும்.

அவரது உயிர் நண்பர்களாக ஆர்.ஜே விக்னேஷ் மற்றும் அம்ருதா. காதல் மீது கொஞ்சம் கூட இன்ட்ரஸ்ட் இல்லாமல் தனிமையில் வாழ்ந்து விடலாம், என நினைத்துக் கொண்டிருக்கும் கார்த்தியின் தொல்லை தாங்க முடியாமல், அவரை லவ்வில் சிக்கி பிஸி ஆக்க விக்னேஷ் முயற்சி செய்கிறார். நண்பர்களின் வற்புறுத்தலால், கண்ணை மூடிக்கொண்டு யாரோ ஒரு பெண்ணுக்கு பேஸ்புக்கில் பிரென்ட் ரெக்வஸ்ட் கொடுக்கிறார் கார்த்தி.

அவர்தான் ரகுல் பிரீத். வெளிநாட்டில் ஒரு மிகப் பெரிய நிறுவனத்தை நடத்திவரும் அவர், ஆண்கள் மீது நம்பிக்கை இல்லாத ஒரு கேரக்டர். ரகுல், அம்ருதா என படத்தில் உள்ள இரண்டு முக்கியமான பெண் கதாபாத்திரங்களுக்குமே, சிறுவயதிலேயே தந்தை விட்டுச் சென்ற ஒரு சோக ஃபிளாஷ் பேக் உள்ளது. ஏன் என்று தெரியவில்லை...

துரத்தி டார்ச்சர் செய்யாமல், காதலன் படப் பாணியில் பல வித்தைகள் காட்டி ஹீரோயினை காதல் வயப்பட வைக்கிறார் கார்த்தி. அதுவரை அட்வென்ச்சர், நட்பு என இருந்த திரைப்படம், காதல் படமாக மாறுகிறது. காதல், பிரிவு, சோகம் பின்னர் ஒரு எமோஷனலான கிளைமாக்ஸோடு முடிகிறது படம்.

படத்தின் முதல் பாதி மிக வேகமாகவும் ஜாலியாகவும் செல்கிறது. அற்புதமான கேமரா, பின்னணி இசை, கலர்புல்லான கேரக்டர்ஸ் என பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளதால் அனைவரும் ரசிக்கக்கூடிய வகையில் உள்ளது. ஆனால், இரண்டாவது பாதியில் காதல், பிரிவு, சோகம் என்று படம் கொஞ்சம் இழுவை என்று தான் சொல்ல வேண்டும்.

காதலர்கள் பிரிவதற்காக சொல்லப்படும் காரணம் கொஞ்சம் சிறுபிள்ளைத் தனமாக இருந்தாலும், கோடீஸ்வர காதல் ஜோடிகள் இப்படி தான் சண்டை போட்டுக் கொள்வார்கள் போல, என்றும் ஒரு பக்கம் தோன்றுகிறது. இரண்டாவது பாதியில், சில தேவையில்லாத காட்சிகளை (20 பேரை அடிக்கும் ஸ்டன்ட் காட்சிகள்) கத்தரித்திருந்தால், படம் சிறப்பாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இமயமலை ஏறுவதை கிளைமாக்ஸில் வைத்திருக்கிறார் இயக்குனர். அதிலும் நம்ம கார்த்தி, சோலோவாக இமயமலையில் செய்யும் சாகசங்கள் எடுபடவில்லை. படத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் இசை பின்னணி இசை ப்ளஸ். ஆனால், வழக்கம் போல, 'எங்கேயோ கேட்ட ராகம்' என்ற பீலிங் முதல் காட்சியில் இருந்தே வருகிறது. ஹாரிஸ் கொஞ்சம் வித்தியாசம் காட்ட வேண்டும். பாடல்கள் நினைவில் இருக்காவிட்டாலும், இதம்.

ஒட்டு மொத்தத்தில், தேவ் ஒரு ஜாலியான அட்வென்ச்சர் ரைடு. இரண்டாவது பாதியை சுருக்கி இருந்தால், ஒரு ஃபன்டாஸ்டிக் ரைடாக இருந்திருக்கும்.

நம்ம ரேட்டிங்: 3/5

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close