எல்.கே.ஜி - விமர்சனம் | LKG Review | RJ Balaji, Priya Anand, Nanjil Sampath |

  Newstm Desk   | Last Modified : 22 Feb, 2019 11:19 am
lkg-movie-review-rj-balaji-priya-anand-nanjil-sampath

ஆர்ஜே பாலாஜி, ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், மயில்சாமி, ஜே.கே.ரித்தீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பொலிடிகல் காமெடி படம்தான் எல்கேஜி. இந்த படத்திற்கு, ஆர்.ஜே பாலாஜி மற்றும் நண்பர்கள் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளனர். எஸ்.ஆர் பிரபு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். லியான் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

தமிழ்நாட்டின் பரபரப்பான அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி, ஒரு முழுநீள அரசியல் காமெடி படத்தை எடுத்துள்ளார் பாலாஜி.
மாநில அரசு முதல் மத்திய அரசு வரை, ஒருவரை விடாமல் கலாய்த்திருக்கின்றனர். படத்தின் ட்ரெய்லருக்கு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு. அதற்கேற்றார்போல படம் முழுக்க அரசியலை மையமாகக் கொண்ட கதை. கடந்த இரண்டு வருடங்களில் தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை பிட்டு பிட்டாக சேர்த்து திரைக்கதை அமைத்துள்ளனர்.

தமிழகத்தின் முதல்வர் இறந்துவிடுகிறார். அவரின் இடத்தை பூர்த்தி செய்வதற்காக, கட்சிக்குள் பெரும் உட்கட்சி பூசல் வெடிக்கிறது. நள்ளிரவில் பதவியேற்பு, ரிசார்ட்டில் அடைத்து வைப்பு, போன்ற பல அரசியல் டெக்னிக்குகளை படத்தில் காட்டி உள்ளனர். சாதாரண கவுன்சிலராக இருக்கும் ஆர்.ஜே பாலாஜி, குறுகிய காலத்தில் முதல்வர் சீட்டை பிடிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கிறார். அது வெற்றி பெற்றதா இல்லையா என்பதை, முழுக்க முழுக்க பொழுதுபோக்காக கொண்டு சென்றுள்ளனர்.

நாஞ்சில் சம்பத், ஜேகே ரித்தீஷ் போன்ற நிஜ அரசியல்வாதிகளை கொண்டுவந்து, அவர்களின் பின்னணியை அவர்களே கலாய்த்துக் கொள்வது போன்ற காட்சிகளை அமைத்திருப்பது பெரிய ப்ளஸ். பாலாஜிக்கு அரசியல்வாதியின் உருவம் இல்லாவிட்டாலும், ஓரளவிற்கு அரசியல்வாதியாக நம் கண்முன் நிற்கிறார்.

அவருக்கு உதவுவதற்காக சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் குழுவின் தலைவராக வருகிறார் ப்ரியா ஆனந்த். பாலாஜியின் தந்தையாக நாஞ்சில் சம்பத். மாமாவாக மயில்சாமி, எதிர் வேட்பாளராக ஜேகே ரித்தீஷ் என முக்கிய கதாபாத்திரங்கள் அனைவருமே தங்களுக்கு கொடுத்த ரோலை சிறப்பாக முடித்து இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

படத்தில் ஒரு சில குறைகள் தான். மீம்ஸ்காகவே எடுக்கப்பட்டுள்ள படம் என்பதால், பல இடங்களில் அரசியல் ரியாலிட்டி இல்லை. இன்னும் கொஞ்சம் நேர்த்தியாக எடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அரசியல்வாதிகளை வெச்சி செஞ்சிருக்கிறார்கள்... ஆனால், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படமா, என்று கேட்டால், இல்லை. படத்தின் க்ளைமேக்ஸிலும் அவசரமாக முடித்த ஒரு பீலிங். பெட்டர் க்ளைமேக்ஸ் வேண்டும் பாஸ்...

இளைஞர்கள், அரசியல் ஆர்வலர்களுக்கு இந்த படம் பொழுதுபோக்கு அம்சமாக பலவற்றை கொடுப்பதனால், இது ஒரு 3 ஸ்டார் படமாக இருக்கும். ஆனால் மற்றவர்களுக்கு 2.5 என சொல்லலாம்.

எல்கேஜி, 2 மணிநேர மீம். 

படத்திற்கு நாம் கொடுக்கும் ரேட்டிங் 2.75/5

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close