90ML - திரை விமர்சனம்

  Newstm Desk   | Last Modified : 01 Mar, 2019 11:56 am
90-ml-movie-review

ஓவியா நடிப்பில், மிகவும் சர்ச்சைக்குரிய விளம்பரங்களுடன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள  திரைப்படம் தான் 90 ML.
ட்ரெய்லரிலேயே, சிகரெட், மது, கஞ்சா என பெண்கள் படுபயங்கரமாக லூட்டி அடிப்பது போன்ற காட்சிகள் வெளியாக, படத்திற்கு எதிர்ப்பு குரல்கள் வலுத்தது. தமிழ் சமுதாயத்தை படம் சீரழிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. ஒரு பக்கம் சிலர் கொந்தளித்தாலும், காலை 5 மணிக்கெல்லாம் ஓவியா ஆர்மி, தியேட்டரில் குவிந்துவிட்டது.

இந்த படம் சமுதாயத்திற்கு நல்ல கருத்து சொல்கிறதா? பெண்கள் முன்னேற்றத்திற்கு இது நல்ல படமா? என்பதை எல்லாம் பற்றி ஆராய்ச்சி செய்வதை ஒதுக்கிவைத்துவிட்டு, படத்தில் போதுமான அளவு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளதா, ஆடியன்ஸின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா, என்று மட்டும் நாம் பார்க்கலாம்.

ஓவியா, மஸூம் ஷங்கர், மோனிஷா ராம், ஸ்ரீ கோபிகா, பொம்மு லட்சுமி ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை அனிதா உதீப் எழுதி இயக்கி தயாரித்தும் உள்ளார். சிம்பு இசையமைத்துள்ளார். ஐந்து பெண்களை மையமாகக் கொண்டது இந்த திரைப்படம். ஒரு அபார்ட்மெண்டில் புதிதாகக் குடியேறும் ஓவியா, அங்குள்ள நான்கு பெண்களுடன் சேர்ந்து ஒரு கேங் உருவாக்குகிறார். திருமணமான மூன்ற பேர், திருமணம் ஆகாத இருவர் என இந்த ஐந்து பேர் சேர்ந்து அடிக்கும் கூத்துக்கள் தான் 90 ML. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க அவர்கள் பார்ட்டி செய்கிறார்கள். படம் முழுக்க குடிக்கிறார்கள் என்று இல்லை. "சரக்கு-லாம் வேணாம், க்ரீன் டீ குடிங்க"-ன்னு ஒரு கட்டத்தில் ஓவியாவே சொல்கிறார்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால், விறுவிறுப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது, படத்திற்கு ப்ளஸ் பாயிண்ட். ஒரு சில இடங்களில், பாடல்கள் கொஞ்சம் போரடித்தாலும் அதற்கேற்றவாறு படம் பிக்கப் ஆகி செல்கிறது.

படத்தில் பல சீன்களில் காமெடி ட்ராக்கும் கலகலக்க வைக்கிறது. ஒரு சில இடங்களில், காமெடி என்ற பெயரில் கொஞ்சம் ஓவராகவே 'மொக்கை' போடுகின்றனர். போதை சீன் என்பதற்காக, திரும்பத் திரும்ப ஒரே டயலாக்கை பேசி, ஒரு சில காட்சிகளை இழுத்தடிப்பதை தவிர்த்திருக்கலாம். க்ளைமேக்ஸ் வரை தாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் எந்தவித காம்ப்ரமைஸும் இல்லாமல், இயக்குனர் அனிதா படத்தை எடுத்துள்ளது சிறப்பு. வழக்கமான தமிழ் சினிமா போல, டிராக் மாறி, கருத்து சொல்லிவிடுவார்களோ என சந்தேகம் எழும்போது, அதை தவிர்த்து இயல்பாகவே செல்கிறது படம். 

ஒரு பாலின உறவை வைத்து முந்தைய படங்களை போல காமெடி மட்டும் செய்யாமல், கொஞ்சம் வித்தியாசமாக பேசியுள்ளது வரவேற்கத்தக்கது. ஒரு சில தேவையில்லாத காட்சிகளை நீக்கியிருந்தால், படம் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

முக்கியமாக, கிளைமாக்ஸில் இசையமைப்பாளர் சிம்பு வந்து ஒரு சிறிய ரோல் செய்துள்ளார். படம் முழுக்க தெளிவாக பேசி முடிவெடுக்கும் ஓவியா, சிம்புவை பார்த்தவுடன் லிப்லாக் செய்து கமிட் ஆவதெல்லாம் கொஞ்சம் ஓவர். அதுவரை இயக்குனர் தக்க வைத்த ஜெனியூனிட்டியை, அந்த இடத்திலிருந்து தவற விட்டுவிட்டார், என்று சொல்லலாம். சிம்பு ஓவியா முத்தக்காட்சி வேண்டும், என்பதற்காக தேவையில்லாமல் இப்படி ஒரு க்ளைமேக்ஸை வைத்தது அப்பட்டமாக தெரிகிறது.

90 ML, இறுதியில் ஒரு ஆவரேஜ் பொழுதுபோக்கு படம். இளசுகளை கவர பல விஷயங்கள் இருந்தாலும், மிக்சிங் சரியில்லை என்பது நம்ம பீலிங்.

நமது ரேட்டிங் 2.5/5

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close