விஜய்சேதுபதி படம் 350 தியேட்டர்களில் ரிலீஸ்

  பால பாரதி   | Last Modified : 02 Feb, 2018 08:38 am


இன்று திரைக்கு வரும் விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’திரைப்படம் 350 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக், காயத்ரி, புதுமுகம் நிஹாரிகா, ரமேஷ் திலக், விஜி சந்திர சேகர் ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கியிருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் சில நிமிடக் காட்சிகளையும்  படக்குழுவினர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று திரைக்கு வரும் இந்தப் படம் கிட்டத்தட்ட 350 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close