• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

விஜய்யின் 'ஆளப்போறான் தமிழன் ' பாடல் புதிய சாதனை

  பால பாரதி   | Last Modified : 13 Feb, 2018 04:57 pm


'ஆளப்போறான் தமிழன்' பாடல் யுடியூப் வழியாக, 4 கோடி பார்வையாளர்களை சென்றடைந்து விஜய்யின் 'மெர்சல்' பட சாதனைக் கிரீடத்தில் மேலும் ஒரு வைரத்தை பதித்துள்ளது. 

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், விஜய் மூன்று மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருந்த 'மெர்சல்' படத்தில் விஜய்க்கு ஜோடிகளாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். 

கடந்த தீபாவளி தினத்தையொட்டி வந்த இந்த படம் டைட்டில் பிரச்னை, படத்தில் வசன பிரச்னை, விலங்குகள் நல வாரியத்தால் வந்த பிரச்னை என  சில பல சர்ச்சைகளை சந்தித்தாலும் வசூலில் சக்கை போடு போட்டது. படத்தின் பிரமாண்ட வெற்றியை,  படக்குழுவுக்கு விஜய்  பார்ட்டி வைத்தும் கொண்டாடியிருந்தார். 

சுமார் 130 கோடி பட்ஜெட் என சொல்லபட்ட இந்தபடம் இதுவரை சுமார் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகவும், விஜய்யின் படங்களிலேயே இதுதான் அதிகமான கலெக்சன் என்றும் சொல்லப்படுகிறது. 


இந்தப்படம் வெளிவந்து 100 நாள்களைக் கடந்திருப்பதையொட்டி விஜய்யின் ரசிகர்கள் அதை மிக சிறப்பாக கொண்டாடி தீர்த்தனர். 'மெர்சல்' படத்தின் வெற்றியில் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கு முக்கிய பங்கு இருந்தது. அதிலும் குறிப்பாக,'ஆளப்போறான் தமிழன்..' என்கிற உணர்ச்சிகரமான பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

தமிழர்களின் கலாச்சாரத்தைப் பற்றி பேசிய இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, பாடகர்கள் கைலாஷ் கேர், சத்யா பிரகாஷ், தீபக், பூஜா ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். 'ஆளப்போறான் தமிழன் ..' பாடல் யுடியூப் வழியாக 40 மில்லியன் பார்வையாளர்களை, 4 கோடி ரசிகர்களை சென்றடைந்து 'மெர்சல்' பட சாதனைக் கிரீடத்தில் மேலும் ஒரு வைரத்தை பதித்துள்ளது

Advertisement:
[X] Close