• முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
  • குற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - தமிழக அரசு

தேடிவந்த 5 படங்கள்... உற்சாகத்தில் விமல்!

  பால பாரதி   | Last Modified : 13 Feb, 2018 05:29 pm


'மன்னர் வகையறா’ படம் வெளியான பிறகு, நடிகர் விமலைத் தேடி 5 படங்கள் வந்திருக்கிறது.  

தமிழ் சினிமாவில் உள்ள வெற்றிகரமான இளம் ஹீரோக்களில் ஒருவராக வளம் வருகிறார் நடிகர் விமல். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த 'மன்னர் வகையறா' படத்தில் ஆனந்தி நாயகியாக நடித்திருந்தார், பூபதி பாண்டியன் இயக்கியிருந்தார், படத்தை விமல் தான் தயாரித்திருந்தார்.  குடும்ப உறவுகளின் மேன்மையை கலகலப்பான பொழுபோக்கு அம்சங்களுடன் சொன்ன இந்தப்படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனால் அளவற்ற மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் இருக்கிறார் விமல். 

'இந்தப்படத்தின் ம் நிச்சயம் எனக்கு வெற்றிக்குப் பிறகே புதிய படங்களை ஒப்புக்கொள்வேன்' என்கிற விரதத்தில் இருந்த விமலின் நம்பிக்கை வீண்போகவில்லை!

ஆம், ‘மன்னர் வகையறா’ வெற்றிக்குப் பிறகு விமல் 5 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். 'வெற்றிவேல்' பட இயக்குநர் வசந்தமணி, ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் அசோக், குறும்பட இயக்குநர் விஜய், இன்னும் இரண்டு இயக்குநர்களின் படங்களில் நடிக்கிறார் விமல்.

இதுதவிர, சற்குணம் இயக்கத்தில் நடிக்கும் ‘கே 2’ படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம், விமல்-வரலட்சுமி ஜோடியாக நடித்துள்ள ‘கன்னிராசி’ படம் வரும் மார்ச் மாதம் ரிலீஸாக உள்ளது. 


Advertisement:
[X] Close