• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

விஷால் வெளியிட்ட 'சந்தோஷத்தில் கலவரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!

  பால பாரதி   | Last Modified : 06 May, 2018 01:54 pm


'சந்தோஷத்தில் கலவரம்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டரை நடிகர் விஷால் வெளியிட்டார். 

ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் திம்மா ரெட்டி தயாரிக்கும் படம் 'சந்தோஷத்தில் கலவரம்'. இந்தப் படத்தில் புதுமுகங்கள் நிரந்த், ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி.கல்யாண், கெளதமி, செளஜன்யா, ஷிவானி ஆகியோர் நடிக்கின்றனர். வில்லன் நடிகர் ரவி மரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இந்தப் படத்துக்கு பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் பவுலியஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இவருடன் ஷிரவன்குமார் என்பவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளார். 


இந்தப் படத்துக்கு சிவநக் இசையமைக்க, கபிலன், மணி அமுதன், ப்ரியன்  ஆகியோர் பாடல்களை எழுத, பல குறும்படங்கள் மற்றும் விளம்பரப்படங்களை இயக்கிய கிராந்தி பிரசாத் இந்தப் படத்தை இயக்குகிறார்.

ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்? என்பதை சொல்லும் இந்தப் படம் சஸ்பென்ஸ் த்ரில்லர், நட்பு, காதல், அன்பு, காமெடி, ஆன்மிகம் எல்லாம் கலந்த ஒரு கமர்ஷியல் படமாகும்.

'சந்தோஷத்தில் கலவரம்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டரை நடிகர் விஷால் வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close