அஜித் பட தயாரிப்பாளர் - இயக்குநர் முட்டல்!

  பால பாரதி   | Last Modified : 05 Mar, 2018 08:38 pm

அஜித்தின் 'விஸ்வாசம்' படத் தயாரிப்பளருக்கும் இயக்குநருக்கும் நடுவே பனிப்போர் நிலவுகிறது என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

நடிகர் அஜித்தும் இயக்குநர் சிவாவும் வீரம், வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து தற்போது நான்காவது முறையாக 'விஸ்வாசம்' படத்துக்காக இணைந்துள்ளனர். 'விவேகம்' படத்தை தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தான் 'விஸ்வாசம்' படத்தையும் தயாரிக்கிறது.

'விவேகம்' படம் எதிர்பார்த்த அளவு போகாததால், நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காகவே மீண்டும் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்து கொடுக்க அஜித் சம்மதித்தார். அப்படி ஆரம்பிக்கப்பட்டது தான் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்திற்கு அஜித் தான் சிவாவை இயக்குநராக தேர்ந்தெத்திருக்கிறார்.

ஏற்கனவே, 'விவேகம்' படத்தை தோல்வி அடைய வைத்ததால், இயக்குநரை மாற்றலாம் என சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன், அஜித்திடம் கோரிக்கை வைக்க, அஜித் அதை ஏற்க மறுத்துவிட்டார்.


இந்த விஷயத்தை கேள்விபட்டதில் இருந்து, இயக்குநர் தரப்பிற்கும் தயாரிப்பு தரப்பிற்கும் ஒரு பரஸ்பர நட்பு சூழல் எட்டாமலேயே படத்துக்கான ஆரம்பக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. இதனால், படம் திட்டமிட்டபடி வருமா, தயாரிப்பளருக்கும், இயக்குநருக்கும் நடுவே சமாதானம் ஏற்படுமா என்று படத்தில் பணியாற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் காத்திருக்கின்றனர்.


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close