ஸ்டெர்லைட் போராட்டக்களத்தில் நடிகர் அபி சரவணன்!

  பால பாரதி   | Last Modified : 03 Apr, 2018 11:49 am


தூத்துகுடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான போராடும் மக்களை நேரடியாக சந்தித்த  நடிகர் அபி சரவணன் அவர்களுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் வழங்கினார். 

வளர்ந்து வரும் இளம் நடிகர் அபி சரவணன், விவசாயிகள் போராட்டம், ஜல்லிக் கட்டுப் போராட்டம் போன்ற மக்கள் பிரச்னைகளில் நேரடியாக இறங்கி, அவர்களுக்கு ஆதரவு அளித்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இப்போது, விஸ்வரூபமெடுத்திருக்கும் ஸ்டெர்லைட் போராட்ட களத்திற்கு நேரடியாக சென்று,  போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களை சந்தித்து தனது ஆதரவை அளித்ததோடு, அவர்களுக்கு உணவுப் பொருட்களையும் வழங்கியிருக்கிறார். 

இது குறித்து நடிகர் அபி சரவணன் கூறுகையில், "தூத்துகுடியில் 48 நாட்களாக போராடி கொண்டிருக்கும் மக்களை சந்திக்க நான், செல்வம் ராமசாமி, மலைராசா, கணேஷ் மற்றும் நண்பர்கள் என ஒரு குழுவாக சென்றோம். மக்களுக்குத் தேவையான பிஸ்கட், பிரட், பழங்கள் போன்ற உணவுப் பொருட்களோடு சென்றோம்.

பயணத்தின் போது, காரின் கண்ணாடிகதவுகளை இறக்கிவிட்டு சென்றபோது ஸ்டெர்லைட் பணியை நிறுத்தி இரு நாட்களாகியும் காற்றின் நெடி கண்களில் எரிச்சலையும், தொண்டை நமச்சலையும் இரண்டு நிமிடங்கள் கூட எங்களால் சமாளிக்க முடியவில்லை! தூத்துக்குடி மக்கள் வாழ்நாள் முழுவதும் எப்படி சமாளிக்கிறார்களோ? 

போராட்டக் களத்தில் இருந்த மக்களை சந்தித்து எங்களின் ஆதரவை தெரிவித்தோம். பிறகு அந்த ஊரின் அடிகுழாயை தேடி சென்று தண்ணீரை குடித்து பார்த்தோம்! மக்களின் கொந்தளிப்பிற்கான காரணம் புரிந்தது. அங்குள்ள சிறுவர், சிறுமிகள் மற்றும் வயதானவர்ளிடயே பாதிப்பு குறித்து கேட்டறிந்தோம். மிகவும் மோசமான உடல் பாதிப்புகளை அந்த மக்கள் அடைந்துள்ளதை அறிந்து வேதனை அடைந்தோம்."என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close