’கோலி சோடா 2’ பாடல்கள் லிங்குசாமி வெளியிட்டார்!

  பால பாரதி   | Last Modified : 15 May, 2018 12:31 pm


விஜய் மில்டனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’கோலி சோடா 2’ பாடல்களை, இயக்குநர் லிங்குசாமி இன்று வெளியிட்டார். 

ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், ’பசங்க’டீமை வைத்து, முதல் முறையாக இயக்கி சூப்பர் ஹிட்டான படம் ‘கோலி சோடா’. தற்போது, இதன் இரண்டாம் பாகத்தை விஜய் மில்டனே தயாரித்து, ஒளிப்பதிவு செய்து, இயக்கியிருக்கிறார்.  

இதில் இயக்குநர் சமுத்திரக்கனி வில்லனாகவும், இயக்குநர் கெளதம் மேனன் போலிஸ் அதிகாரியாக சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளனர். மேலும், முக்கிய வேடங்களில் செம்பன் வினோத் ஜோஸ், ரோகினி, சுபிக்‌ஷா, கிருஷா குருப், ரக்‌ஷைதா பாபு, பரத் சீனி, வினோத், எசக்கி பரத் ஆகியோரும் நடித்துள் ளனர். இந்தப் படத்திற்கு அச்சு இசையமைத்துள்ளார்.


சமீபத்தில், வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீசர், மற்றும் ட்ரெய்லர் ஆகியவற்றுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் ‘பொண்டாட்டியே..’எனும் சிங்கிள் டிராக்கை மகளிர் தின ஸ்பெஷலாக இசையமைப்பாளர் அனிருத் வெளியிட, அந்தப் பாடல் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்தது. 

இந்நிலையில், இந்தப் படத்தில் இடம் பெறும் மற்ற பாடல்களை, இயக்குநர் லிங்குசாமி இன்று வெளியிட்டார். இப்படம் வரும் ஜூன் மாதம் 14-ம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close