கவனம் ஈர்த்த’காளி’நாயகி ஷில்பா!

  பால பாரதி   | Last Modified : 19 May, 2018 08:11 pm


விஜய் ஆண்டனியின் ’காளி’ பட நாயகி ஷில்பா, அந்தப் படத்தில் வரும்  'அரும்பே’ பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் அரும்பியிருக்கிறார்.

இரு தினங்களுக்கு முன்பு திரைக்கு வந்த, விஜய் ஆண்டனியின் ’காளி’ பட நாயகிகளுள் ஒருவரான ஷில்பா, அந்தப் படத்தி வரும் ’அரும்பே’என்கிற பாடலில் நாயகன் விஜய் ஆண்டனியுடன் காதல் ரசம் சொட்ட நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். அந்தப் பட அனுபவம் குறித்து ஷில்பா கூறுகையில், " விஜய் ஆண்டனியின் ‘காளி’படத்தில் நானும் ஒரு கதாநாயகியாக நடித்திருப்பதை பெருமையாக நினைக்கிறேன். சற்றும் கவனத்தை திசை திருப்பாத திரைக்கதை, திறமையான நட்சத்திரங்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள். 


இந்தப் படத்தில் என்னுடைய கதா பாத்திரத்தின் பெயர் பார்வதி. என் நிஜ வாழ்வில் எப்படி இருப்பேனா, அதற்கு முற்றிலும் எதிர்மறையான கதாபாத்திரம். நான் நவ நாகரீகமான  சூழ் நிலையில் வளர்ந்த பெண். பார்வதி கதாபாத்திரமோ முற்றிலும் மாறாக கிராமிய சூழ்நிலையில் வளரும் பெண். பல்வேறு பருவத்தை பிரதிபலிக்கும் பாத்திரம். மனோதத்துவ ரீதியாக மிக மிக பலம் பொருந்திய கதாபாத்திரம். ’அரும்பே’ பாடல் நான் எண்ணி கூட பார்த்திராத உயரத்தை தந்து உள்ளது. ரசிகர்கள் என்னை ஏற்று கொண்டு  என்னை மேலும் உச்சத்தில் கொண்டு போவார்கள் என்கிற நம்பிக்கையுடன் உள்ளேன். தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி, சாண்ட்ரா, கதாநாயகன் விஜய் ஆண்டனி, இயக்குநர் கிருத்திகா உதயநிதி ஆகியோருக்கு நான் காலம் முழுக்க கடமை பட்டு உள்ளேன்" என்றார் ஷில்பா.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close