'சாமி ஸ்கொயர்' மோஷன் போஸ்டர் யூடியூப்பில் சாதனை

  Newstm Desk   | Last Modified : 20 May, 2018 02:36 pm

விக்ரமின் சாமி ஸ்கொயர் படத்தின் மோஷன் போஸ்டர் யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது. 

15 வருடம் கழித்து தற்போது சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் இயக்குநர் ஹரி. இதில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், பிரபு, பாபி சிம்ஹா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இதற்கு சாமி ஸ்கொயர் என தலைப்பு வைத்திருக்கிறார்கள். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. 

இந்நிலையில் இந்தபடத்தின் மோஷன் போஸ்டரும் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வந்தனர். 

இந்நிலையில் இந்த மோஷன் போஸ்டர் யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது. இதனைய தற்போது 2 மில்லியன் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் 71 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். 

இது தான் இதுவரை அதிகம் லைக்ஸ் வாங்கிய தமிழ் மோஷன் போஸ்டராகும். இதற்கு படக்குழு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close