ஜி.வி.பிரகாஷ் - வசந்தபாலன் படம் நாளை தொடங்குகிறது

  டேவிட்   | Last Modified : 24 May, 2018 09:18 pm


இசையமைப்பாளராக இருந்து நடிகரான ஜி.வி.பிரகாஷ் தற்போது படு பிஸியாக இருக்கிறார். 4ஜி, ஐங்கரன், அடங்காதே, குப்பத்து ராஜா, 100% காதல், சர்வம் தாள மயம், ரெட்டைக் கொம்பு, கருப்பர் நகரம், பெயரிடப் படாத ஆதிக் ரவிச்சந்திரனின் படம் என பத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் பல படங்களுக்கு அவரே இசையும் அமைக்கிறார். ராஜிவ் மேனன் இயக்கத்தில் இவர் நடிக்கும் சர்வம் தாள மயம் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இவரின் செம படம் இந்த வாரம் வெளியாகிறது. 

தவிர, சுதா கொங்கரா - சூர்யா இணையும் படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் தான் இசை. இந்நிலையில் தன்னை வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகிற்கு அறிமுகப் படுத்திய, இயக்குநர் வசந்த பாலனுடன் ஜி.வி. இணைகிறார். காவிய தலைவன் படத்திற்குப் பிறகு கடந்த நான்காண்டுகள் படம் எதுவும் இயக்காமல் இருந்த வசந்த பாலன் ஜி.வி.பிரகாஷிற்காக ஒரு கதையை தயார் செய்திருக்கிறார். இவர்கள் இணையும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close