விஜய்காந்த் கண்களை டாட்டூ குத்திய அவரது இளைய மகன்

  Newstm Desk   | Last Modified : 29 May, 2018 11:22 pm


விஜயகாந்தின் கண்களை அவரது இளைய மகன் சண்முகபாண்டியன், கையில் பச்சை குத்திக்கொண்டு தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட போட்டோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அரசியலில் மீம்ஸ்களால் அடிபட்டாலும் தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகால வெற்றிபயணத்தை உரசிவிட்டு வந்த சகாப்தம் விஜயகாந்த். தனது அப்பாவின் 40 ஆண்டுகால கலை பயணத்தை பாராட்டும் விதத்தில் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் தனது வலது கையில் மிரட்டும் கண்களை பச்சைக்குத்தியுள்ளார். தனது கையில் குத்திய டாட்டூவை தந்தையிடம் காட்டி மகிழ்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சண்முகபாண்டியன் ’சகாப்தம்’, ’மதுரவீரன்’ படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement:
[X] Close