அருவி பட இயக்குநரின் அடுத்த படம்

  Newstm Desk   | Last Modified : 30 May, 2018 11:10 am

அருவி பட இயக்குநரின் அடுத்த படத்தை 24 ஏஎம் ஸ்டூடியோஸ் தயாரிக்கின்றது.

ஒரே படத்தில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் அருவி படத்தை  இயக்கிய அருண் பிரபு. அந்த படத்தின் தாக்கம் பல நாட்களுக்கு படத்தை பார்த்தவர்களிடம் இருந்தது. அவர் அடுத்ததாக என்ன படம் இயக்க உள்ளார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவியது. 

இந்நிலையில் அவரது அடுத்த படத்திற்கான அறிவிப்பு நேற்று வெளியாகி உள்ளது. 24 ஏஎம் நிறுவனம் அந்த படத்தை தயாரிக்க உள்ளது. 

இந்த படத்தின் பூஜை நேற்று குமிலியில் உள்ள நோஷ்ரம் ஆஸ்ரமத்தில் நடந்தது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும் படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement:
[X] Close