சுசீந்திரனின் சாம்பியன் தொடங்கியது

  டேவிட்   | Last Modified : 31 May, 2018 04:58 pm

suseenthiran-s-champion-starts-today

சிலரால் மட்டுமே ஒரு படத்திலிருந்து மாறுபட்டு மறு படத்தை இயக்க முடியும். அப்படி கமெர்ஷியல், ஜனரஞ்சக சினிமா, கருத்துள்ள படம் என வித விதமாக படம் இயக்குபவர் சுசீந்திரன். வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கபாடி விளையாட்டை மையப்படுத்தி தான் இயக்கிய முதல் படத்திலேயே தனக்கான ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். பிறகு கிரிக்கெட்டை மையமாக வைத்து ஜீவா படத்தை இயக்கினார். இந்த இரு படங்களில் வெற்றியும் கண்டார்.
இந்நிலையில் அவர் மீண்டும் விளையாட்டை மையப் படுத்திய ஒரு படத்தை இயக்குகிறார். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து தான் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், ஆதலால் காதல் செய்வீர்” படத்தில் வேலை செய்த பழைய டீமுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதாகவும் முன்பே இதைப் பற்றி அறிவித்திருந்தார். 
படத்தின் பெயர் சாம்பியன். இன்று அந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. படத்திற்கு அரோல் கரோலி  இசையமைக்கிறார். 
`இன்று கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து `சாம்பியன்’ என்ற திரைப்படத்தை துவங்கி உள்ளோம். வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா திரைப்படத்தை தொடர்ந்து நான் இயக்கும் மூன்றாவது ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இத்திரைப்படத்தில் ரோஷன் புது முக ஹீரோ அறிமுகமாகிறார். அஞ்சாதே நரேன், ஜி.கே.ரெட்டி, ஜெயப்பிரகாஷ் இவர்களுடன் மிருணாளினி ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படத்தை டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம்’ என்று இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சுசீந்திரன். 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close