யுவனை நெருங்கவிடாத கூட்டம்... பிரபல இயக்குநர் வருத்தம்!

  டேவிட்   | Last Modified : 01 Jun, 2018 06:28 am

i-miss-you-yuvan-says-suseenthiran

இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை நெருங்க விடாமல் அவரது நட்பு வட்டாரம் தடுப்பதாக பிரபல இயக்குநர் சுசீந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கமர்ஷியல், ஜனரஞ்சக சினிமா, கருத்துள்ள படம் என வித விதமான படங்களை இயக்குபவர் சுசீந்திரன். வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கபாடி விளையாட்டை மையப்படுத்தி தான் இயக்கிய முதல் படத்திலேயே தனக்கான ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். பிறகு கிரிக்கெட்டை மையமாக வைத்து ஜீவா படத்தை இயக்கினார். இந்த இரு படங்களில் வெற்றியும் கண்டார்.

இந்நிலையில் அவர் மீண்டும் விளையாட்டை மையப் படுத்திய ஒரு படத்தை இயக்குகிறார். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து தான் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், ஆதலால் காதல் செய்வீர்” படத்தில் வேலை செய்த பழைய டீமுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதாகவும் முன்பே இதைப் பற்றி அறிவித்திருந்தார். 

படத்தின் பெயர் சாம்பியன். நேற்று அந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. இத்திரைப்படத்தில் ரோஷன் புது முக ஹீரோவாக அறிமுகமாகிறார். அஞ்சாதே நரேன், ஜி.கே.ரெட்டி, ஜெயப்பிரகாஷ் இவர்களுடன் டப்ஸ்மாஷ் பிரபலம் மிருணாளினி ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார்.  சாம்பியன் படத்திற்கு அரோல் கரோலி இசையமைக்கிறார். 

நான் மகான் அல்ல, ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர் என ஹிட் ஆல்பங்களைக் கொடுத்த யுவன் மீண்டும் சுசீந்திரனுடன் இணைவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர் பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. 

இந்நிலையில், சுசீந்திரன் ட்விட்டரில் “யுவன் ஷங்கர்-உடன் ‘சாம்பியன்’ படத்தில் நான் பணியாற்ற முடியவில்லை. யுவன் ரசிகர்களுக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். யுவனுடன் நான் பணியாற்ற முடியாத சூழ்நிலைக்கு காரணம், இப்பொழுது யுவனை சுற்றியுள்ள நண்பர்கள் தான் (புதிய நண்பர்கள்) காரணம். இந்த தகவலை கூட நான் யுவனிடம் கூற முடியவில்லை. எதிர்காலத்தில் உறுதியாக நான் யுவனுடன் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close