கமிஷனர் ஏழுச்சாமி: விக்ரமையும் விட்டுவைக்காத தமிழ்படம்!

  Newstm Desk   | Last Modified : 04 Jun, 2018 04:34 pm
tamil-padam-2-new-poster-trolling-saamy-square

'சாமி' படத்தின் ஆறுச்சாமி கதாபாத்திரத்தை கலாய்க்கும் வகையில் கமிஷனர் ஏழுச்சாமி என போஸ்டர் வெளியிட்டு இருக்கிறது 'தமிழ்படம்' குழு.

இயக்குநர் அமுதன் இயக்கத்தில் வெளியான தமிழ்படம் வெற்றியை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. போலீஸ் அத்தியாயம் என்று உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. விஜய், அஜித், விஜய் சேதுபதி, சூர்யா தொடங்கி தோனி, ஸ்டாலின் வரை யாரும் தப்பவில்லை. அனைவரையும் கலாயக்கும் படி டீசரில் காட்சிகள் இடம் பெற்று இருந்தது.

வெளியான 3 நாட்களில் இந்த டீசரை 50 லட்சம் பேர் பார்துள்ளனர். நேற்று ஹரி இயக்கத்தில் சாமி படத்தின் இரண்டாம் பாகமான சாமி ஸ்கொயர் படத்தின் டிரைலர் வெளியானது. அந்த டிரைலரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் அமுதன் 'நன்றி' என பதிவிட்டு இருந்தார்.

இன்று தமிழ்படம் டீசரை 50 லட்சம் பேர் பார்த்துள்னர் என்பதற்காக புதிய போஸ்டரை 'தமிழ்படம்2' குழு வெளியிட்டது. அதில் கமிஷனர் ஆஃப் போலீஸ் ஏழுச்சாமி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று வெளியான டிரைலரை இன்று கலாய்த்து போஸ்டர் வெளியிட்டுள்ளனர். தமிழ்படம் டீசரை போல இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close