காலா தடை; கர்நாடக உயர் நீதிமன்றம் சென்றார் தனுஷ்

  shriram   | Last Modified : 04 Jun, 2018 08:14 pm
dhanush-moves-to-karnataka-high-court-over-kala-issue

காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடவும், அதை திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பளிக்க உத்தரவிட வேண்டியும், நடிகர் தனுஷ் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தொடுத்துள்ளார். 

ரஜினிகாந்த் நடிப்பில், ரஞ்சித் இயக்கி, தனுஷ் தயாரித்துள்ள காலா திரைப்படம் வரும் வியாழனன்று உலகெங்கும் வெளியாகிறது. அரசியலுக்கு வந்தது முதல் ரஜினிகாந்த் கூறிய பல்வேறு விஷயங்கள் சர்ச்சையை கிளப்பின. அந்த வரிசையில் காவிரி விவகாரத்தில் கர்நாடத்துக்கு எதிராக ரஜினி பேசியதால், அவர் நடித்து வெளியாகும் காலா படத்தை அங்கு வெளியிட கர்நாடக திரைப்பட சங்கம் தடை விதித்தது. 

இந்நிலையில், தனுஷ் தரப்பில் இருந்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும், படத்தை திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பளிக்கவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close