இணையத்தில் லீக் ஆன துருவ நட்சத்திரம் டீசர்

  கனிமொழி   | Last Modified : 05 Jun, 2018 02:47 pm
dhruva-natchathiram-teaser-leaked-in-social-sites

இளைஞர்களின் விருப்ப இயக்குநர் கெளதம் மேனன் காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் ஒரு படத்தை இயக்குவதாக கடந்த 2013-ல் அறிவித்தார். ஹீரோயின் கதாப்பாத்திரத்திற்கு த்ரிஷா, அசின், சமீரா ரெட்டி, பிரியா ஆனந்த் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தப் பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிவிக்கப் பட்டது. 

ஆனால் சூர்யாவுக்கும் கெளதம் மேனனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், படத்திலிருந்து விலகுவதாக சூர்யா அறிவித்தார். அதனால் படமும் கிடப்பில் போடப் பட்டது. 

அதன் பிறகு 2015-ல் என்னை அறிந்தால் படத்தை முடித்த கையோடு, திரும்பவும் கிடப்பில் போடப் பட்ட படத்தை தூசு தட்டி 'துருவ நட்சத்திரமாக' மாற்றினார் கெளதம். இந்தப் படத்திற்கு விக்ரம் ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப் பட்டார். ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்கள் தேர்வு செய்யப் பட்டனர். 

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக அறிவிக்கப் பட்டு, கடந்தாண்டு ஜூனில் படத்தின் ஷூட்டிங்கைகும் ஆரம்பித்தனர். 
இந்நிலையில் 45 விநாடிகள் கொண்ட துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் தற்போது இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. அதனால் தற்போது படக்குழுவினரே அதிகாரப் பூர்வமாக டீசரை வெளியிட்டு இருக்கிறார்கள். 

சமீபத்தில் ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவாகியிருக்கும் 2.0 படத்தின் டீசரும் இணையத்தில் லீக் ஆனது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close