'காலா' டிக்கெட் முன்பதிவு மந்தம்!

  பால பாரதி   | Last Modified : 05 Jun, 2018 12:25 pm
rajini-s-kaala-movie-ticket-booking-slow

ரஜினியின் ’காலா’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு மிகவும் மந்த நிலையில் உள்ளதாக, தமிழக திரையரங்க உரிமையாளர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது.   

தனுஷின் வொண்டர் பார் பட நிறுவனத்தின் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும்  'காலா' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்திருக்கிறார். பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'கபாலி'யின் மெகா ஹிட்டுக்குப் பிறகு ரஜினியை இதில் பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

’காலா’ படம் ஜூன் 7-ந்தேதி (நாளை மறுநாள்) திரைக்கு வருகிறது. ஆனால், ரசிகர்கள் மத்தியில் வழக்கமான  உற்சாகம் மிஸ்ஸிங்!  

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினிகாந்த்துக்கு, இந்திய சினிமாவையையும் தாண்டி, உலக அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். ஆகவே, அவரின் புதிய படங்கள் வெளிவரும் போது தியேட்டர்களில் திருவிழா போல கொண்டாட்டமாக இருக்கும்! 

ஆனால், ரிலீசுக்கு இன்னும் இரண்டே நாட்களில் திரைக்கு வரும் ’காலா’ படத்திற்கு வழக்கத்திற்கு மாறாக மந்தமான சூழ்நிலையே நிலவுகிறது. ஜூன் 7 மற்றும் 8ம் தேதிகளை தவிர, வார நாட்களில் ‘காலா’ படத்திற்கான முன்பதிவு பெரிய அளவு இல்லை! திரையரங்குகளின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை மூலம் இதை நேரடியாகப் பார்க்க முடிகிறது. மேலும், தமிழக திரையரங்க உரிமையாளர்கள் வட்டாரமும் இதை உறுதி செய்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close