நிர்வாணமாக நடித்தது ஏன்? - நடிகை அக்ரிதி சிங் விளக்கம்!

  பால பாரதி   | Last Modified : 05 Jun, 2018 03:00 pm
why-naked-actress-akruti-singh-s-explanation

’எக்ஸ் வீடியோஸ்’ என்கிற படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக தோன்றி பரபரப்பை பற்ற வைத்திருக்கும் நடிகை அக்ரிதி சிங், தான் நிர்வாணமாக நடித்தது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். 

கடந்த வாரம் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘எக்ஸ் வீடியோஸ்’ என்கிற படம், ஆபாச இணைய தளங்களால் வரும் ஆபத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பற்றி பேசுகிறது. அறிமுக இயக்குநர் சஜோ சுந்தர் இயக்கியுள்ள இப்படத்தில் புதுமுகம் அக்ரிதி சிங், ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முதல் படத்திலேயே இவ்வளவு துணிச்சலாக நடித்துள்ளது குறித்து அவர் கூறுகையில்,

”நான் கொல்கத்தாவில் பிறந்தவள், இப்போது மும்பையில் செட்டிலாகி இருக்கிறேன். மாடலிங், விளம்பரங்கள்,மேடை நாடகங்களைத் தொடர்ந்து சினிமாவுக்கு வந்திருக்கிறேன். சில இந்திப் படங்களில் நடித்துள்ள நான், தற்போது ’எக்ஸ் வீடியோஸ்’ என்கிற படம் வாயிலாக தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளேன்.  

பாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இங்கு வேலை பார்ப்பது எனக்கு பிடித்திருக்கிறது. இங்குள்ளவர்கள் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். இது ஒரு சமூக பிரச்னை சார்ந்த திரில்லர் படம். சமூகத்தில் நடக்கும் குற்றங்களைப் பற்றி தான் படம் பேசுகிறது. இதில் ஆபாசம் இல்லை, நிச்சயமாக குடும்பத்துடன் பார்கலாம்.

ஆபத்து தெரியாமல் எடுக்கப்படும் வீடியோக்கள்,வெளியே கசிந்து எப்படி ஒரு குடும்பத்தை பாதிக்கிறது என்கிற விழிப்புணர்வை தருகிறது இந்தப் படம். கதைக்கு தேவைப்பட்டதால் ஒரு காட்சியில் நிர்வாணமாக தோன்றினேன். நான் அப்படி நடித்ததற்கு ஒரு அழுத்தமான காரணம் இருக்கிறது. இதை நான் செய்யவில்லை என்றால், இந்தப் படத்தை எடுத்ததற்கே அர்த்தம் இல்லாமல் போயிருக்கும். ஒரு நடிகையாக அந்த கதாபாத்திரத்திற்கு தேவையானதை நான் செய்தேன். இதில் தவறு ஒன்றும் இல்லை!

இந்த படம் பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும், இந்த படத்தை பார்ப்பவர்கள் அவர்கள் அறியாமல் செய்ய தவறுகளை இனி செய்யாமல் இருக்க உதவும். ஏனென்றால், இங்குள்ள நிறையே பேருக்கு போர்ன் கிரைம் (ஆபாசப்படக் குற்றம்) பற்றி தெரிவதில்லை” என்றார். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close