காலா படம் பார்க்க லீவு கொடுத்த நிறுவனம்! உங்க கம்பெனி?

  ஐஸ்வர்யா   | Last Modified : 05 Jun, 2018 08:04 pm
it-company-declares-holiday-for-kaala

பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவரவுள்ள காலா படத்தினை திரையரங்கில் சென்று பார்ப்பதற்கு தனியார் ஐடி நிறுவனம் ஒன்று காலா வெளியீடு அன்று விடுமுறை அளித்துள்ளது.

ரஜினி படம் என்றாலே வரவேற்பு, அராவாரம், பரப்பரப்பு என்பது ரசிகர்கள் மத்தியில் கூடுதலாகவே இருக்கும். அதிலும் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு வெளியாகும் படமான காலாவை அரசியல் கண்ணோட்டத்துடன் எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள். தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் காலா படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. காலா வெளியாகவுள்ள நாளை மறுநாள் ஜூன் 7ம் தேதி தியேட்டர்களில் திருவிழா தான்.  

இந்நிலையில் கேராள மாநிலம் கொச்சியில் உள்ள டெலியஸ் டெக்னாலஜிஸ் என்ற மென்பொருள் நிறுவனம், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் திரைக்குவந்த அன்றே பார்த்துவிடவேண்டும் என்பதற்காக அன்று ஒருநாள் விடுமுறை அறிவித்துள்ளது. இதேபோல் காலா படத்தினை பார்க்க நாம் பணிபுரியும் கம்பெனியிலும் லீவு விட மாட்டார்களா என்பது சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ்! 

 


இதுகுறித்து டெலியஸ் டெக்னாலஜிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா படத்தை வெளியான அன்றே பார்க்க வேண்டும் என ஊழியர்களின் கோரிக்கைக்கு இணங்க, காலாவிற்காக ஜூன் 7 ஆம் தேதி ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளோம். அன்றைய தினத்தில் உங்கள் வசதிக்கேற்ப எந்த ஷோவை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளுங்கள். காலாவிற்காக விடுமுறை அளிப்பதில் டெலிஜியஸ் பெருமைக் கொள்கிறது” என தெரிவித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close