புது வரவு : ஒத்தையா வரும் வேங்கையன் மவன்!

  பால பாரதி   | Last Modified : 06 Jun, 2018 12:23 pm
rajini-s-kaala-movie-release

ரஜினியின் ’காலா’ நாளை வெளிவருவதால் வேங்கையன் மகனோடு போதுவதைத் தவிர்த்து, மற்றவர்கள் எல்லோரும் பின் வாங்கிக் கொள்ளவே,  மொத்த வசூலையும் வாரி சுருட்டிக் கொள்ள வேங்கையன் மவன் மட்டும் ஒத்தையா வருகிறார்.

இவ்வளவு நாளும் மிகுந்த ஆவலோடு காத்திருந்த ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக வந்தே விட்டார் ’காலா’. பல்வேறு சிக்கல்களைக் கடந்து, தடைகள் அத்தனையும் தகர்த்துத் தவிடுபொடியாக்கிவிட்டு வெளி வருகிறது ’காலா’. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகியிருக்கும் ’காலா’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. உலக முழுக்க உள்ள ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை  ஹிட்டாக்கும் தீவிரத்தில் இருக்கின்றனர். 

தனுஷின் வொண்டர் பார் பட நிறுவனத்தின் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும்  'காலா' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்திருக்கிறார். பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். 

நெல்லை சீமையிலிருந்து, மும்பைக்கு பிழைப்பு தேடி சென்ற ஒருவர், அங்குள்ள மக்களின் மனதில் இடம்பிடித்து, அந்த மக்களுக்காக போராடும் தலைவனாக மாறுவதைப் பற்றிப் பேசுகிறது ’காலா’. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close