ரஜினிக்கு ’காலா’ கை கொடுக்குமா? கவுக்குமா?

  பால பாரதி   | Last Modified : 06 Jun, 2018 02:05 pm
rajini-s-kaala-movie-hit-or-flap

ரஜினியின் ஆன்மிக அரசியல் அறிவிப்புக்குப் பிறகு வெளிவரும் ’காலா’ திரைப்படம், அவரின் அரசியல் பயணத்துக்கு கை கொடுக்குமா? அல்லது கவுக்குமா? என்கிற எதிர்பார்ப்பும், கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது! 

’கபாலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் பா.ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினி இருவரும் மீண்டும்  'காலா' படத்தில் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் ரஜினியின் காதலியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியும், மனைவியாக ஈஸ்வரிராவும் நடித்திருக்கிறார்கள். ’காலா’ திரைப்படம் படம் நாளை (ஜூன் 7-ந்தேதி) திரைக்கு வருகிறது. ஆனால், ரசிகர்கள் மத்தியில் வழக்கமான  உற்சாகம் மிஸ்ஸிங்! 

கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினிக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பதால், அவரின் புதிய படம் வெளிவரும் போது தியேட்டர்களில் திருவிழாக் கொண்டாட்டமாக இருக்கும்! ஆனால், அந்த உற்சாகமும், கொண்டாட்டமும் ’காலா’ படத்திற்கு இல்லை! ’கபாலி’யைப் போலவே ’காலா’வும் ஒரு ’டானின்’ கதை என்பதால், இது ரசிகர்கள் மத்தியில் சலிப்பையே தருகிறது! இதனாலேயே, ’காலா’ படத்தின் டீசர் மற்றும் பாடல்களுக்கு அதிகம் வரவேற்பு இல்லாமல் போனது! 

இதைப் போலவே, ‘காலா’ படத்திற்கான முன்பதிவும் மிகவும் மந்தமாகவே இருக்கிறது. திரையரங்குகளின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை மூலம் இதை நேரடியாகப் பார்க்க முடிகிறது. ஆகவே, ’காலா’வின் வருகை கொஞ்சம் ’டல்’ அடிக்கவே செய்கிறது! 

மேலும், ரஜினியின் ஆன்மிக அரசியல் அறிவிப்புக்குப் பிறகு வெளிவரும் படம் என்பதால் ’காலா’ திரைப்படம், அவரின் அரசியல் பயணத்துக்கு மிக முக்கியமான படமாகப் பார்க்கப்படுகிறது! 
ஆனால், ரஜினியின் சமீபத்திய பேச்சும், அவரின் நடவடிக்கையும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது! குறிப்பாக  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த ரஜினியின் கருத்து மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. 

இப்படியொரு மோசமான சூழ்நிலையில் வெளிவரும் வரும் ’காலா’ ரஜினிக்கு கை கொடுக்குமா? அல்லது கவுக்குமா? என்கிற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது? இதற்கான விடை நாளை தெரியும்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close