விஜய்யிடமிருந்து ரஜினி கற்றுக்கொள்ள வேண்டும்... அமீர் அட்வைஸ்!

  பால பாரதி   | Last Modified : 06 Jun, 2018 07:00 pm
director-advoice-to-rajini

”பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி? என்பதை விஜய்யிடம் இருந்து ரஜினிகாந்த் கற்றுக்கொள்ள வேண்டும்!” என்று அமீர் கூறியிருக்கிறார். 

சமீபகாலமாக, ரஜினிக்கு கட்டம் சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும்! காவிரி விவகாரத்தில் காவலர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்தது முதல் தூத்துக்குடிக்கு போய் வந்தது வரை அவரை பிரச்னைகள் துரத்துகின்றன. தூத்துக்குடிப் பயணத்துக்கு பின் ரஜினியின் ’காலா’ படத்துக்கு வரும் சோதனைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை! அத்துடன் பலரின் வெறுப்புக்கும் ஆளாகியிருக்கிறார்! இயக்குநரும் நடிகருமான அமீர், ரஜினியின் தூத்துக்குடி பயணத்தை விமர்சனம் செய்திருக்கிறார். 

துப்பாக்கிச்சூட்டில் பலியான ஸ்னோலின் என்கிற 17 வயது பெண்ணின் வீட்டிற்கு நடிகர் விஜய் இன்று அதிகாலை நேரத்தில் சென்று ஆறுதல் தெரிவித்ததுடன், துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். இதை பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக யாருக்கும் தொந்தரவு தராமல், இரவு நேரத்தில் ஆறுதல் சொல்லச் சென்றதை பலர் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். 

இந்நிலையில், அரசுக்கு எதிராகப் பேசிய வழக்கில் அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இயக்குநர் அமீரிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “நடிகர் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னதோடு, நிதி உதவியும் செய்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ரஜினி போல ஆர்ப்பாட்டமாக இல்லாமல், அமைதியான முறையில் தூத்துக்குடி சென்று வந்திருக்கிறார் விஜய். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி? என்பதை ரஜினிகாந்த், விஜய்யிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close