• திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்
  • பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவி சஸ்பெஸ்ட்!

பாஜக-வில் இணைந்தாரா நடிகை வரலட்சுமி சரத்குமார் ?

  சுஜாதா   | Last Modified : 07 Jun, 2018 11:09 am

i-have-not-joined-bjp-or-anyother-political-party-varalaxmi-sarathkumar

நடிகை வரலட்சுமி பாஜகவில் இணைந்துவிட்டதாக வெளியான செய்திகளுக்கு தற்போது அவர் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். 

பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் நேற்று வரலட்சுமி சரத்குமாரை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவருடன் தமிழக பாஜக நிர்வாகிகள் பலரும் அவருடன் இருந்தனர். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, வரலட்சுமி பாஜகவில் சேர்ந்துவிட்டார் என்று ஒரு தகவல் பரவியது.


    
இதனை தொடர்ந்து வரலட்சுமி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட விளக்கம்:   ''பெண்கள் பாதுகாப்பு மற்றும் பிற விஷயங்களில் பாஜக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து முரளிதரராவிடம் பேசினோம். அது மிகச் சிறந்த சந்திப்பாக அமைந்தது. பிரதமர் மோடி எங்களின் கருத்துகளையும் அறிந்துகொள்ள விரும்புகிறார் என்பது நல்ல செய்தி. அதற்குள் இந்தச் சந்திப்பு குறித்து எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்புகிறார்கள். நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்வது ''நான் பாஜக மட்டுமல்ல; எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை'' என்று வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக,  பாஜக அரசு  2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காக ‘சம்பார்க் ஃபார் சமர்தன்’ திட்டத்தை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பாஜக தலைவர்கள் முக்கிய பிரபலங்களை சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். பிரபலங்களை சந்தித்து மோடி அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை எடுத்துச் சொல்லி ஆதரவு திரட்ட வேண்டும் என்பதே இந்த திட்டத்தின்  நோக்கம். அதன் அடிப்படையிலேயே,  முரளிதரராவ் நேற்று வரலட்சுமி சரத்குமாரை அவரது இல்லத்தில் சந்தித்தார் என கூறப்படுகிறது.    

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close