• திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்
  • பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவி சஸ்பெஸ்ட்!

அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த ரஜினி!

  பால பாரதி   | Last Modified : 07 Jun, 2018 10:15 am

rajinikanth-ready-to-karthiksubbaraj-movie

’காலா’ திரைக்கு வந்திருக்கும் சூட்டோடு, சூப்பர் ஸ்டார் தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துவிடார்! 

ரஜினியின் ’காலா’ இன்று திரைக்கு வந்திருக்கிறது. இதற்கிடையே, ஷங்கரின் ‘2.0’ படத்தின் ஃபோஸ்ட்  புரொடக்‌ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது! இந்நிலையில், ’காலா’ திரைக்கு வந்திருக்கும் சூட்டோடு, சூப்பர் ஸ்டார் தனது அடுத்த ஆட்டத்தையும் ஆரம்பித்துவிடார்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ரஜினியின் ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை யார்? என்பது இன்னும் முடிவாகவில்லை!  மேலும் இதில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதில் ரஜினிகாந்த் கறுப்பு முடி - தாடியுடன் தோன்றுகிறார். சில நாட்களாக ரஜினி, இந்த ’கெட் அப்’பில் தான் வலம் வருகிறார்! இந்தப் படத்தில் ரஜினி கல்லூரிப் பேராசிரியராக வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்தப் படத்துக்கான திரைக்கதை - வசனம் அமைக்கும் பணிகளை முடித்து விட்டு, ரஜினி உட்பட மற்ற எல்லா நட்சத்திரங்களின் கால்ஷீட்டை வாங்கி வைத்துக் கொண்டு படப்பிடிப்புக்கு தயார் நிலையில் இருந்தார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். 

எனவே, ’காலா’ படம் இன்று திரைக்கு வந்த சூட்டோடு கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் சென்னையில் இருந்து கிளம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங்கை உத்தரகாண்டில் உள்ள டேராடூனில் துவங்கத் திட்டமிட்டுள்ளனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close