அடுத்த ரஜினியாக வேண்டும் என்ற ஆசையில்லை: சிம்பு

  Newstm Desk   | Last Modified : 07 Jun, 2018 08:37 am

i-dont-want-to-be-next-rajinikanth-simbhu

தனக்கு அடுத்த ரஜினியாக வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார். 

சமீபத்தில் தனக்கு ரசிகர்கள் வழங்கி உள்ள 'யங் சூப்பர்' ஸ்டார் பட்டம் குறித்து நடிகர் சிம்பு பேசியுள்ளார். அப்போது, “ நான்  சிறு வயதில் இருந்தே ரஜினிகாந்தின் பாடல்களுக்கு நடனமாடி இருக்கிறேன். எனக்கு எப்போதும் ரஜினி போல ஆக வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. ஆனால் அடுத்த ரஜினியாக ஆக வேண்டும் என்று நான் எப்போதும் கூறியதில்லை. அவரின் வளர்ச்சியை பார்த்து வந்திருக்கிறேன். அவர் போன்ற நடிகராக நினைத்திருக்கிறேன். நான் படையப்பா பார்த்தபோது அவரது ரசிகர்கள் அவரை கொண்டாடி கொண்டு இருந்தனர். அப்போது என்னையும் ஒரு நாள் இப்படி கொண்டாடுவார்களா? என்று நினைத்திருக்கிறேன். 

பலர் நான் அடுத்த ரஜினியாக ஆக முடியாது என்று கூறியுள்ளனர். அவர்களே எதையோ நினைத்துக்கொண்டு என் நம்பிக்கையை குறைக்க தொடங்கினர். நான் சூப்பர் ஸ்டாராக நினைக்கவில்லை. நான் அவரை போல் ஆக தான் நினைத்தேன். அதில் எந்த தவறும் இல்லை. 

ரசிகர்களிடம் தவறான செய்தியை முன்வைக்கின்றனர். ஒரு காலத்தில் எம்ஜிஆர் போல ஆக வேண்டும் என்று நினைத்தவர் ரஜினியாக ஆனார். பின்னர் ரஜினியாக ஆக நினைத்தவர்கள் விஜய், அஜித்.

அனவைரும் நான் ஏன் சிறு வயதில் அடுத்த ரஜினியாக வேண்டும் என்று சொன்னீர்கள், இப்போது ஏன் அந்த கருத்தில் இருந்து மாறி விட்டீர்கள் என்று கேட்கிறார்கள். எனக்கு ஒன்று தான் புரியவில்லை, பலர் அரசியல் தெரியாத என்றும், எனக்கு அரசியல் பிடிக்காது என்றும் கூறிவிட்டு தற்போது திடீரென்று அரசியலில் குதித்துள்ளனர். அதையெல்லாம் யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் என்னை மட்டும் இத்தனை கேள்வி கேட்கிறார்கள்” என்று கூறினார்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த காலா படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் தனுஷ், "சினிமாவிற்கு புதிதாக வருபவர்கள் எல்லாம் சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்று நினைக்கிறார்கள்" என்று பேசினார். இந்நிலையில் தனுஷிற்கு பதிலளிக்கும் வகையில் தான் சிம்பு இவ்வாறு பேசி உள்ளார் என்று கூறப்படுகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close