வெளியான 2 மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸில் 'காலா'

  Newstm News Desk   | Last Modified : 07 Jun, 2018 10:54 am

tamil-rockers-released-kaala-within-2-hours-after-official-release

ரஜினிகாந்தின் காலா படம் வெளியான இரண்டு மணிநேரத்திலேயே தமிழ் ராக்கர்சில் வெளியாகி உள்ளது திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கபாலி படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் 'காலா'. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எவ்வளவு எதிர்பார்ப்பு இருந்ததோ அந்த அளவுக்கு உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்பும் கிளம்பியது. 

பல சர்ச்சைகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இன்று நாடு முழுவதும் காலா பிரமாண்டமாக வெளியானது. காலை சிறப்பு காட்சிக்கு வந்த ரசிகர்கள் படத்தின் ரிலீசை திருவிழா போல கொண்டாடினர். இந்நிலையில் படம் இந்தியாவில் வெளியான 2 மணி நேரத்தில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இது திரைத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

முன்னதாக காலா படத்தின் டிரைலர் வெளியான போது யூடியூப்பில் பின்னூட்டம் அளித்திருந்த தமிழ்ராக்கர்ஸ், காலா படம் திரையரங்கில் வெளியாவதற்கு முன்பே நாங்கள் வெளியிடுவோம் என்று பகிரங்கமாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close