கடும் கோபத்தில் ஆபாசப் பட இயக்குநர்!

  பால பாரதி   | Last Modified : 07 Jun, 2018 05:10 pm
adult-movie-director-got-emotions

'ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற ஆபாசப் படங்களை எடுத்த இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயகுமார், மீடியாக்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்!  

கெளதம் கார்த்திக் நடிப்பில் வந்த 'ஹர ஹர மகாதேவகி’ மற்றும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற அடல்ட் காமெடிப் படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயகுமார், தற்போது ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிப்பில், ஆர்யா ஹீரோவாக நடித்திருக்கும் ‘கஜினிகாந்த்’ என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். 

இந்தப் படத்தின் பணிகள் முடிந்து, தணிக்கை சான்று பெறுவதற்காக சென்சார் போர்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுவும் ’அடல்ட்’ ரகத்தை சேர்ந்த்தாக தான் இருக்கும் என்கிற கண்ணோட்டத்தில் படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர், அசந்தே போனார்களாம்! சந்தோஷ் பி.ஜெயகுமாரின் முந்தைய ஆபாசப்படங்களைப்போல் இல்லாமல், ‘கஜினிகாந்த்’ படம் அனைவரும் பார்க்கக் கூடிய படமாக இருந்ததே, தணிக்கைக்குழுவின் ஆச்சர்யத்திற்கான காரணம். அத்துடன், ‘கஜினிகாந்த்’ படத்துக்கு ’யூ’ சர்ட்டிஃபிக்கேட்டும் வழங்கியிருக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க,‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய இரண்டு படங்களையும் கடுமையாக விமர்சித்த ஊடகங்கள் மீது கடுப்பில் இருக்கிறாராம் சந்தோஷ் பி.ஜெயகுமார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close