ஆர்யாவின் ’கஜினிகாந்த்’ பட சிங்கிள் ட்ராக் ரிலீஸ்!

  பால பாரதி   | Last Modified : 08 Jun, 2018 12:55 pm

arya-s-gajinikaanth-movie-single-track-release-today

ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ’கஜினிகாந்த்’ படத்தின் ’ஹோலா.. ஹோலா..’ என்கிற சிங்கிள் ட்ராக் இன்று ரிலீஸ் ஆகிறது.

அடல்ட் காமெடிப் படங்களை இயக்குவதில் பெயர் போனவர் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயகுமார். அவர், கெளதம் கார்த்திக்கை வைத்து இயக்கிய 'ஹர ஹர மகாதேவகி’ மற்றும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களுக்கு இளைஞர்கள் வட்டாரத்தில் ஏக மவுசு இருந்தது.எனவே, அவரின் அடுத்த படமான ’கஜினிகாந்த்’ திரைப்படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவ்லோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

ஆர்யா - சாயிஷா ஜோடியாக நடித்திருக்கும் ’கஜினிகாந்த்’ படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்க, இந்தப் படத்தை வெற்றிகரமாக இயக்கி முடித்திருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயகுமார். இந்தப் படத்துக்கு பால முரளி பாலு இசையமைத்திருக்கிறார். 

இந்நிலையில்,’கஜினிகாந்த்’ படத்தில் இடம் பெறும் ’ஹோலா.. ஹோலா..’ என்கிற சிங்கிள் ட்ராக்கை இன்று வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close