'பிக் பாஸ்' வீட்டிற்கு போக ஆசைப்படும் பிரபல நடிகை!

  பால பாரதி   | Last Modified : 08 Jun, 2018 01:10 pm
actress-anuya-ready-to-bigg-boss-2

'இன்னொரு சான்ஸ் கிடைத்தால் மறுபடியும் 'பிக் பாஸ்' வீட்டிற்குப் போகத் தயாராக இருப்பதாக' சொல்கிறார் ’எஸ்.எம்.எஸ்’ நடிகை அனுயா.  

’சிவா மனசுல சக்தி’ ’மதுரை சம்பவம்’, ’நகரம்’, ’நான்’ உட்பட பல படங்களில் நாயகியாக நடித்திருக்கும் நடிகை அனுயா, 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று, சில நாட்களிலேயே அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

’பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் சட்ட திட்டங்களையும், அதில் பங்கேற்ற போட்டி யாளர்களையும் முழுமையாகப் புரிந்து கொள்வதற்குள்ளாகவே அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது அனுயாவுக்குப் பெரும் குறையாகவே இருந்துள்ளது! 

இந்நிலையில், ’பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. வரும் 17-ந் தேதியிலிருந்து  பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியை தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல் என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. மற்றபடி, போட்டியாளர்கள் யார் யார்? என்பது ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. சிம்ரன் முதல் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்ப இருப்பதாக சில தகவல் வந்துகொண்டே இருக்கிறது. ஆனால், இதை யாரும் உறுதிபடுத்தவும் இல்லை மறுக்கவும் இல்லை.    

இந்த வேலையில், ’இன்னொரு சான்ஸ் கெடச்சா மறுபடியும் 'பிக் பாஸ்' வீட்டிற்குப் போகத் தயாராக இருப்பதாக’  சமீபத்தில் அளித்த பத்திரிகை பேட்டியொன்றில் நடிகை அனுயா தனது ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்.  ஆனால் அவரின் ஆசை,  நிறைவேற வாய்ப்புஇல்லை! ஏனென்றால், பிக்பாஸ் வருகிற 17ம் தேதி முதல் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான புதிய புதிய டீசர்களை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு வருகிறது. ஒவ்வொன்றையும் கமல் ரசிகர்கள் வைரலாக்கி கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close