காதல் காட்சியை கேட்டு வாங்கிய நடிகை!

  பால பாரதி   | Last Modified : 10 Jun, 2018 09:48 am
actress-subiksha-on-goli-soda-2

இயக்குநர் விஜய் மில்டனிடம், நெருக்கமான காதல் காட்சியை கேட்டு வாங்கி நடித்திருக்கிறார் புதுமுக நடிகை சுபிக்‌ஷா! 

 அடுத்த வீட்டு பெண் போன்ற மிகவும் இயல்பான தோற்றத்தில் இருக்கும் நடிகை சுபிக்‌ஷா, 'கடுகு' படத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். தற்போது அவர், விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'கோலி சோடா 2’ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் வரும் 14-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், நடிகை சுபிக்‌ஷா,  'கோலி சோடா 2’ பட அனுபவம் பர்றி கூறியதாவது, 

"எனது முதல் படமான ‘கடுகு’, எனக்கு பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது. ரசிகர்கள் என்னை ’கடுகு’ சுபிக்‌ஷா என்று அழைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. மீண்டும் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம் என நினைத்தேன். ஆனால், உடனடியாக அந்த வாய்ப்பு என் வீட்டு கதவை தட்டும்  என நான் எதிர்பார்க்கவேயில்லை. 

’கோலி சோடா 2’ படத்தில் என் கதாபத்திரத்தின் பெயர் இன்பவல்லி, இந்தக் கதாபாத்திரத்தில், ’இயல்பாக நடித்தாலே போதும், எந்த முன் தயாரிப்பு வேலையும் தேவையில்லை’ என விஜய் மில்டன் சார் சொன்னார்.  
’கடுகு’ படத்தில் எனக்கு ஜோடியாக நடித்திருந்த பரத் சீனி தான், இந்தப் படத்திலும் ஜோடி. ’கடுகு’ படத்தில் எனக்கும், அவருக்கும் ஒரு சில காட்சிகளே இருந்தன, அதை நான், விஜய் மில்டன் சாரிடம் சொல்ல, அவர் அதை சீரியஸாக எடுத்து கொண்டு ’கோலி சோடா 2’ படத்தில் எனக்கும், பாரத் சீனிக்கும் அழுத்தமான காட்சிகளை கொடுத்திருக்கிறார். பாரத் சீனி ஆக்‌ஷன் காட்சிகளை விட, காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்” என்றார்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close