ஶ்ரீ லீக்ஸில் சிக்கிய பிக்பாஸ்... ரசிகர்கள் அதிர்ச்சி!

  திஷா   | Last Modified : 11 Jun, 2018 12:45 pm
sree-reddy-s-shocking-statement-on-nani

தமிழ் சினிமாவுக்கு எப்படி சுச்சி லீக்ஸோ, அதே போல் தெலுங்கு தேசத்துக்கு ஒரு ஶ்ரீ லீக்ஸ். தனக்கு வாய்ப்பு கொடுக்கிறேன் எனக் கூறி, தன்னிடம் தவறாக நடந்து கொண்ட பல முக்கியஸ்தர்களை அடையாளம் காட்டுவேன் என சமூக வலைத்தளங்களில் அறிவித்தார் ஶ்ரீ லீக்ஸ் புகழ் ஶ்ரீரெட்டி.

சுச்சி லீக்ஸ் போல ஸ்ரீ லீக்ஸும் ஒரு சில நாட்களில் காலாவதியாகி விடும் என எண்ணியவர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார் ஶ்ரீ. இதில் பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என பலரின் உண்மை முகம் வெளிப்பட்டது. இதில் உச்சகட்டமாக, தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகரான ராணாவின் தம்பி அபிராமின் அந்தரங்க புகைப்படங்களுடன், ஆபாச சாட்களும் வெளியாகியது. இதனால், தெலுங்கு பிரபலங்கள் சற்று ஆடித்தான் போனார்கள். 

ஶ்ரீ ரெட்டியின் இந்த புயல் ஓய்ந்தது என அனைவரும் ஆசுவாசப் படுத்திக் கொண்ட நேரத்தில் நானியின் ஆபாச படங்கள் விரைவில் வெளி வர இருக்கிறது. அதை காண காத்திருங்கள் என மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் ஶ்ரீ ரெட்டி. இதனால் மீண்டும் பலருக்கு வயிற்றில் புளியைக் கரைத்து விட்டிருக்கிறார் ஶ்ரீ. பிக்பாஸின் 2-வது சீசனை தொகுத்து வழங்க காத்திருக்கும் நானிக்கும், அவரது ரசிகர்களுக்கும் இது ஒரு வித அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close