பிக் பாஸ் 2-வை நிராகரித்த ஆர்யாவின் காதலி!

  Bala   | Last Modified : 11 Jun, 2018 01:48 pm
aparnathi-aviod-bigg-boss-2-programme

‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் ஆர்யாவின் காதலியாக வர்ணிக்கப்பட்ட அபர்ணதி, ’பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து வந்த அழைப்பை நிராகரித்துள்ளாராம்.

புதிதாக தமிழுக்கு வந்த தனியார் தொலைக்காட்சியில் டி.ஆர்.பி-ஐ பிடிக்க ஆரம்பிக்கப்பட்டது எங்க விட்டு மாப்பிள்ளை. நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அபர்ணதி. நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்ற பெண்களைக் காட்டிலும், ஆர்யாவை ’வாடா... போடா...’ என கூப்பிடும் அளவுக்கு அவருடன் நெருக்கமாக இருந்தார். இதனால், ஆர்யாவின் காதலி என எல்லோரும் அவரை சொல்லினர். ஆனால், அவர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறினார். அப்போது, ”50 வயதானாலும் ஆர்யாவுக்காக காத்திருப்பேன், வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்”  என கூறிச் சென்றார் அபர்ணதி.

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவருக்கு, வசந்த பாலன் இயக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அபர்ணதி சினிமாவில் நடிக்கும் விஷயம் அறிந்து மேலும் பல இயக்குநர்கள் அவரை தங்கள் படத்தில் நடிக்க வைக்க ஆர்வமாக இருக்கின்றனர். 

இந்நிலையில்,‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அபரணதிக்கு அழைப்பு வந்ததாம். ஆனால் அதை அவர் நிராகரித்துவிட்டாராம்!

’பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் சான்ஸ் கிடைக்காதா? என பல நடிகைகள் ஏக்கத்தில் காத்திக்கும் போது, அந்த வாய்ப்பை அபர்ணதி நிராகரிக்க காரணம் சொன்ன காரணம் என்ன தெரியுமா? “நானே சமைத்து சாப்பிடுவது எல்லாம் எனக்கு செட்டாகாது! அதுமட்டுமில்லாமல், ’பிக் பாஸ்’ நிகழ்ச்சியே எனக்கு ஒத்துவராத நிகழ்ச்சி, அதனால் தான் நிராகரிச்சுட்டேன்” என்கிறார் அபர்ணதி.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close