என்னையும் காலாவாக உணர்ந்தேன் - ஜிங்னேஷ் மேவானி!

  Shalini   | Last Modified : 12 Jun, 2018 12:19 pm

jignesh-mevani-s-tweet-about-pa-ranjith

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த 'காலா' படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ரஜினியுடன் இணைந்து ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, சமுத்திரகனி, திலீபன், அஞ்சலி பாட்டில், அருந்ததி, மணிகண்டன் மற்றும் பலர் நடித்திருந்தார்கள். மற்ற ரஜினி படங்களைப் போல் பெரியளவில் ஓப்பனிங் இல்லை என ஒரு புறம் சொன்னாலும், மறுபுறம் படம் பேசும் அரசியலுக்காக பாஸிட்டிவ் விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. 

கபாலி ரஜினிக்காக தான் ஓடியது என சில பேர் சொன்னார்கள், ஆனால் காலா முழுக்க முழுக்க ரஞ்சித் படம் என்பதை ரஜினி ரசிகர்களே சொல்ல கேட்க முடிகிறது. தியேட்டரில் டைட்டில் கார்டில் வரும் ரஞ்சித் பெயருக்கு, ரசிகர்கள் தரும் கை தட்டல்களே இதை உறுதிப் படுத்துகின்றன. 

இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் எம்.எல்.ஏ-வும், ஒடுக்கப் பட்டோருக்கான செயல்பாட்டாளருமான ஜிங்னேஷ் மேவானி தனது ட்விட்டரில், "பா.ரஞ்சித்தின் காலா படத்தை நிச்சயம் பாருங்கள். நான் நேற்று தான் பார்த்தேன், என்னையும் காலாவாக உணருகிறேன். சகோதரர் பா.ரஞ்சித் இன்னும் ஒரு சிறந்த படத்தைக் கொடுத்திருக்கிறார். சவாலான விஷயங்களை மிக நுட்பமாக மற்றுமொரு பொழுது போக்கு வழியில் சொல்லியிருக்கிறார். உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன் பா.ரஞ்சித்" எனத் தெரிவித்துள்ளார். 

இதற்காக ஜிங்னேஷ் மேவானிக்கு தனது நன்றியை தெரிவித்திருக்கிறார் ரஞ்சித். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close