• திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்
  • பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவி சஸ்பெஸ்ட்!

சுஜாதாவின் 'பத்து செகண்ட் முத்தம்' டைட்டிலை மட்டும் தூக்கிய இயக்குநர்!

  Bala   | Last Modified : 12 Jun, 2018 06:04 pm

vincent-selva-s-pathu-second-mutham-is-a-nick-of-time-thriller

மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின்  'பத்து செகண்ட் முத்தம்' என்கிற நாவலின் தலைப்பை, ஒரு திரைப்படத்துக்கு டைட்டிலாக வைத்துள்ளனர்.  

பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் ’கரையெல்லாம் செண்பகப்பூ’, ’ப்ரியா’ போன்ற நாவல்கள் சில திரைப்படங்களாகி உள்ளன. அவர் எழுதிய ’பத்து செகண்ட் முத்தம்' என்கிற நாவலின் தலைப்பை, இப்போது ஒரு திரைப் படத்துக்கு டைட்டிலாக வைத்துள்ளனர். புது முகங்கள் கீதா - சரிஷ் ஜோடியாக நடிக்க, மிஸ்டர் இந்தியா ஸ்ரீனிவாசன் வில்லனாக நடிக்கிறார். ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மற்றும் தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் கதை வசனனத்தை ரூபன் எழுத,வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், விஜய் நடித்த ’ப்ரியமுடன்’, முரளி நடித்த ’வாட்டாகுடி இரணியன்’ போன்ற படங்களை இயக்கிய வின்செண்ட் செல்வா இப்படத்தை இயக்குகிறார். லக்‌ஷ்மி டாக்கீஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது. 

இது குறித்து இயக்குநர் வின்செண்ட் செல்வா கூறுகையில், "ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சவாலான, மர்மங்களை கண்டுபிடிப்பதை சொல்லும் சுஜாதாவின் ’பத்து செகண்ட் முத்தம்’ நாவலும், அந்த தலைப்பு என்னை ஈர்த்தது. என் படத்தின் நாயகியும் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சில மர்மங்களை கண்டுபிடிப்பார், அதனால் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தேன். இதை தவிர நாவலுக்கும், படத்துக்கும் வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது.

இந்தக் கதையை எழுதி முடித்தவுடனே புதுமுகங்கள் தான் பொருத்தமாக இருப்பார்கள் என்று முடிவு செய்தேன். அதனால் புதுமுகங்களாக நடிக்க வைத்தேன். பெண் சாதிக்க நினைத்த விஷயம் வன்முறைக்கு வழி வகுக்கிறது என்ற விஷயத்தை பற்றி பேசும் இந்தப் படம் அதிவேகமாக இருக்கும், படத்தில் பாடல்கள் இல்லை, பின்னணி இசை மட்டுமே உள்ளது” என்றார்.
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close