• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

அனைவரையும் வியக்க வைத்த கடைக் குட்டி சிங்கம்!

  திஷா   | Last Modified : 13 Jun, 2018 05:40 am

kadai-kutty-singam-s-attractive-gift-to-the-guests

பசங்க என்ற தனது முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கியவர் பாண்டிராஜ். தற்போது கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். விவசாயத்தை மையப் படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் விவசாயியாக கார்த்தி நடிக்கிறார். சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதனை நடிகர் சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.  

கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் டி.இமான். நேற்று இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துக் கொண்டனர். குறிப்பாக படக்குழுவினர் அனைவரும் கிராமத்து பாணியில் உடையணிந்து வந்திருந்திருந்தார்கள்.

படத்தில் நடித்திருக்கும் நடிகர் நடிகைகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பது தான் வழக்கம். ஆனால் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப் பட்டது அனைவரையும் வியக்க வைத்தது. கூடவே கலந்துக் கொண்ட அனைவருக்கும் ரிட்டர்ன் கிஃப்டாக மரக்கன்றுகளை வழங்கியிருக்கிறார்கள் கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close