குழந்தை தொழிலாளர்களுக்கு முற்றுப் புள்ளி வைப்போம் - த்ரிஷா!

  திஷா   | Last Modified : 13 Jun, 2018 05:42 am

trisha-at-unicef-event

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதை தவிர்த்து, அவர்களுக்கு உரிய கல்வியைக் கொடுக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். 

இதை பற்றிய விழிப்புணர்வை சமூக ஆர்வலர்களும், பல்வேறு தொண்டு நிறுவனங்களும் பொது மக்களுக்கு எடுத்து சொல்லி வருகிறார்கள். இதில் முக்கியமான ஒன்று UNICEF அமைப்பு. இது உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் அனைவருக்கும் குழந்தை தொழிலாளர்களின் அவசியத்தை எடுத்துரைத்து வருகிறது. 

இந்த அமைப்பின் கேரளா மற்றும் தமிழக, குழந்தைகள் உரிமை நல்லெண்ண தூதராக த்ரிஷா செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று இந்த அமைப்பு நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் த்ரிஷா கலந்துக் கொண்டார். 'நாம் அனைவரும் ஒன்றிணைந்து குழந்தை தொழிலாளர்களுக்கு முற்றுப் புள்ளி வைப்போம்' என அதில் அவர் கேட்டுக் கொண்டார். அதோடு 'குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணியையும்' தொடங்கி வைத்தார். 

இதனை UNICEF அமைப்பு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது. 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close