கெளதம் மேனனின் அடுத்தப் படம் யாருடன் தெரியுமா?

  திஷா   | Last Modified : 13 Jun, 2018 05:43 am

gautham-menon-confirms-his-next-project

இளைஞர்களுக்குப் பிடித்த ஃபேவரிட் இயக்குநர் லிஸ்டில் முதல் ஐந்து இடங்களுக்குள் நிச்சயம் இயக்குநர் கெளதம் மேனனின் பெயரும் இருக்கும். இவர் தற்போது 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'துருவ நட்சத்திரம்' ஆகியப் படங்களை இயக்கி வருகிறார்.

இதில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இதன் 2 பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா, சிம்ரன் மற்றும் பலர் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்திருக்கிறார்கள். 

இந்நிலையில் இவரது அடுத்தப் படத்தைப் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்தப் படம் சூர்யாவுக்காக உருவாகி வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதனை சமீபத்திய இன்டர்வியூவில் கெளதம் மேனனே சொன்னாராம். காக்க காக்க, வாரணம் ஆயிரம் என ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்த இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் மூன்றாவது படத்தில் பிரிந்தனர். அந்தப் படம் தான் தற்போது விகரம் நடிப்பில் துருவ நட்சத்திரமாக உருவாகியுள்ளது குறிப்பிடத் தக்கது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close