• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் கமல் ஜோடிகள்?

  பால பாரதி   | Last Modified : 13 Jun, 2018 05:41 am

actress-snega-and-rambha-in-bigg-boss-2

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில், அவருக்கு ஜோடிகளாக நடித்த சினேகா மற்றும் ரம்பா இருவரும் இடம் பிடித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.     

கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி வரும் ஜூன் 17ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாக இருப்பதால் இப்போதே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டது. இந்த நிகழ்ச்சியின் புரோமோஷன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால்,போட்டியாளர்கள் யார் யார்? என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. இதனால்,’பிக் பாஸ் 2’ வில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பட்டியலை தங்களது இஷ்டத்துக்கு பலரும் சமூக வலைதளங்களில் வெளியிட்டபடியே இருக்கின்றனர். 

இந்நிலையில், ’பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் இரண்டு பேர் பற்றிய உறுதியான தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களாக வலம் வந்த சினேகாவும், ரம்பாவும் தான் அந்த இருவர் என்கிற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. ’வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் கமல் ஜோடியாக சினேகாவும், ’காதலா காதலா’ படத்தில் ரம்பாவும் நடித்துஇருந்தனர் என்பது கவனத்தில் கொள்ளத் தக்கது!  
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close