அதர்வாவின் 'பூமராங்' பட ரிலீஸ்  பிளானிங்!

  Bala   | Last Modified : 12 Jun, 2018 10:13 pm
atharvaa-s-boomerang-release-planing

அதர்வா நடித்திருக்கும் 'பூமராங்' படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகுமென தெரிவித்திருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். 

’ஜெயம் கொண்டான்’, ’கண்டேன் காதலை’, ’இவன் தந்திரன்’ போன்ற படங்களை இயக்கியிருக்கும் ஆர்.கண்ணன் இப்போது அதர்வா நடிக்கும் ’பூமராங்’ படத்தை, மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இயக்கி வருகிறார். இதில் அதர்வா ஜோடிகளாக மேகா ஆகாஷ் - இந்துஜா ஆகியோர் நடித்திருக்கின்றனர். மேலும் ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாசினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இதில் அதர்வா, 3 வித்தியாசமான தோற்றங்களில் வருகிறார். இதற்காக அவருக்கு, புரோஸ்தடிக் மேக்கப் முறையைக் கையாண்டுள்ளனர். 

’பூமராங்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.இதையடுத்து, படத்தை ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வர திட்ட மிட்டிருப்பதாக சொன்னார் இயக்குநர் ஆர்.கண்ணன். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close